
தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ராயன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
தனுஷின் 50வது திரைப்படமான ராயன், அவரது இயக்கத்திலேயே உருவாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் வெளியீட்டு தேதி ஜூன் மாதம் என சில தினங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியான நிலையில், இப்படத்தில் முதல் பாடல் எப்போது வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
அதன்படி, தனுஷ் வரிகளில், பிரபு தேவாவின் நடன இயக்கத்தில் உருவான 'அடங்காத அசுரன்' பாடல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஜூலை மாதம் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த தனுஷின் 'ராயன்' திரைப்படம், திட்டமிட்ட தேதிக்கு முன்னதாகவே ஜூன் மாதத்தில் வெளியிட போவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
அதனால் வருகிற ஜூலை 18-ஆம் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
embed
'அடங்காத அசுரன்' பாடல்
#CinemaUpdate | சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், தனுஷ் இயக்கி, நடிக்கும் 'ராயன்' படத்தின், 'அடங்காத அசுரன்' பாடல் நாளை வெளியாகும் என பட தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு! ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், தனுஷ் வரிகளில், பிரபு தேவாவின் நடன இயக்கத்தில் இப்பாடல் தயாராகியுள்ளது!#SunNews | #Raayan |... pic.twitter.com/wum2j9vka8— Sun News (@sunnewstamil) May 8, 2024