தியேட்டரில் ஸ்னாக்ஸ் விலைகளை குறைத்ததாக PVR சினிமாஸ் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
பொதுவாகவே, தியேட்டர்களில் குறிப்பாக மல்ட்டிப்ளெக்ஸ் அரங்கங்களில் விற்கப்படும் ஸ்னாக்ஸ் விலை அதிகமாக உள்ளது என பலதரப்பட்ட மக்களும் குறைகூறி வந்தனர்.
சில நாட்களுக்கு முன்னர், ட்விட்டர் பயனர் ஒருவர் PVR தியேட்டருக்கு படம் பார்க்க சென்றுள்ளார். அங்கே 600 மிலி பெப்ஸியும், 55 கிராம் பாப்கார்னும், வாங்குவதற்கு தான் 850ரூ கட்டவேண்டியதாக இருந்தது என குறைபட்டு, அந்த ரசீதையும் இணைத்து பதிவிட்டிருந்தார்.
கூடவே, இந்த விலை, பிரபல OTT நிறுவனத்தின் ஓர் ஆண்டு சந்தாவிற்கு நிகராக உள்ளதாகவும், அதனால் தான் தியேட்டருக்கு வரும் கூட்டம் குறைந்துள்ளது எனவும் கூறியிருந்தார்.
இந்த பதிவை பலரும் ஷேர் செய்து, ஆமோதித்திருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக, தற்போது PVR நிறுவனம், அனைத்து திரையரங்குகளிலும் ஸ்னாக்ஸ் விலையை குறைந்துள்ளதாக அறிவித்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
வைரலாக ட்வீட்
Rs 460 for 55gm of cheese popcorn, Rs 360 for 600ml of Pepsi. Total Rs 820 at @_PVRCinemas Noida.
— Tridip K Mandal (@tridipkmandal) July 1, 2023
That’s almost equal to annual subscription of @PrimeVideoIN.
No wonder people don’t go to cinemas anymore. Movie watching with family has just become unaffordable. pic.twitter.com/vSwyYlKEsK
ட்விட்டர் அஞ்சல்
PVRஇன் பதில்
We at PVR believe that every opinion matters and it must be respected. We have this update for you and for every moviegoer in India #PVRHeardYou https://t.co/rrBL3xFUJs pic.twitter.com/PsOvxxqAaj
— P V R C i n e m a s (@_PVRCinemas) July 12, 2023