மலையாள திரைப்படங்களுக்கு தடை விதித்த PVR, INOX திரையரங்கங்கள்
நாளை ரம்ஜானை முன்னிட்டு பல பெரிய பட்ஜெட் மலையாள மொழி திரைப்படங்கள் வெளிவரவுள்ளது. இந்த நிலையில் கடைசி நேர ட்விஸ்ட்டாக கேரளாவில் உள்ள PVR, INOX திரையரங்குகள் புதிய மலையாள படங்களை வெளியிட தடை விதித்துள்ளது. இதன் காரணமாக, 'ஆவேஷம்', 'வருஷங்களுக்கு ஷேஷம்' மற்றும் 'ஜெய் கணேஷ்' போன்ற மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த தடை எதற்காக என்பதை குறித்து அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை எனினும், தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் ஏற்பட்ட உள்ளடக்க பகிர்வு தான் காரணம் எனக்கூறப்படுகிறது. அதோடு ஏற்கனவே வெளியான 'ஆடுஜீவிதம்' வெற்றிகரமாக ஓடி கொண்டிருப்பதால், பல திரையரங்கங்கள் அதனை தூக்கிவிட்டு புதுபடம் வெளியிட யோசிப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து தயாரிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
மலையாள திரைப்படங்களுக்கு தடை
BAN for MALAYALAM movies over PVR & INOX due to content sharing issue !! So no shows are allocated for #Aavesham, #VarshangalkkuShesham & #JaiGanesh till now over PVR & INOX properties Discussion is going on to sort out the issue. Expecting to be sorted out soon today &...— AmuthaBharathi (@CinemaWithAB) April 10, 2024
மலையாள திரைப்படங்களுக்கு தடை
Ban for Tomorrow's New Malayalam releases in PVR INOX Kerala Screens. Big loss to the new releases: #Aavesham #VarshangalkkuShesham #JaiGanesh— ForumKeralam (@Forumkeralam2) April 10, 2024