NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / துணை நடிகை தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 'புஷ்பா' பட நடிகர் ஜெகதீஸ் பிரதாப்
    அடுத்த செய்திக் கட்டுரை
    துணை நடிகை தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 'புஷ்பா' பட நடிகர் ஜெகதீஸ் பிரதாப்
    துணை நடிகை தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 'புஷ்பா' பட நடிகர் ஜெகதீஸ் பிரதாப்

    துணை நடிகை தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 'புஷ்பா' பட நடிகர் ஜெகதீஸ் பிரதாப்

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 07, 2023
    05:09 pm

    செய்தி முன்னோட்டம்

    தெலுங்கு திரையுலகின் துணை நடிகை ஒருவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவரின் தந்தை அளித்த புகாரின் பேரில், 'புஷ்பா' பட நடிகர் ஜெகதீஸ் பிரதாப் பண்டாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

    கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'புஷ்பா'. தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது.

    இப்படத்தில் 'புஷ்பா' என்ற முதன்மை கதாபாத்திரத்தில் நடித்ததற்கு, அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்து.

    இந்த திரைப்படத்தில், அல்லு அர்ஜுனின் நண்பனாக, 'கேசவா' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ஜெகதீஸ் பிரதாப் பண்டாரி.

    இவர் துணை நடிகை ஒருவரை தற்கொலைக்கு தூண்டியதாக, ஐபிசி பிரிவு 174-ன் கீழ் பஞ்சாகுட்டா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    card 2

    துணை நடிகைக்கு மிரட்டல் விடுத்த ஜெகதீஸ்

    இது குறித்து இந்து தமிழில் வெளியான செய்திபடி, கடந்த நவம்பர் 29-ம் தேதி துணை நடிகை ஒருவர் தற்கொலை செய்து கொண்டதற்கு தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் அவரை யாரோ தற்கொலைக்கு தூண்டியிருப்பது தெரிய வந்துள்ளது.

    அதன் பின்னர், அப்பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் நடிகர் ஜெகதீஸ் பிரதாப் பண்டாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

    தற்கொலை செய்து கொண்ட துணை நடிகை, சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த போது, ஜெகதீஸுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    எனினும், சில காலத்திற்கு பிறகு அவர்கள் பிரேக்அப் செய்துகொண்டனர்.

    இருப்பினும், ஜெகதீஸ், அந்தப் பெண்ணுக்கு தொடர்ந்து அந்தரங்க புகைப்படங்களை அனுப்பி, அவற்றை இணையத்தில் கசிய விடுவதாக மிரட்டியதாகவும், அதனாலேயே அவர் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தெலுங்கு திரையுலகம்
    தற்கொலை

    சமீபத்திய

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் விலகுகிறாரா? இன்ஸ்டாகிராம் பதிவால் கிளம்பிய ஊகங்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால்
    பஞ்சாப் கிங்ஸ் அணியின் இயக்குநர்கள் மீது ப்ரீத்தி ஜிந்தா வழக்கு; காரணம் என்ன? பஞ்சாப் கிங்ஸ்
    வடகிழக்கு மாநிலங்களில் அதிகளவு முதலீடு செய்யபோவதாக அம்பானி, அதானி அறிவிப்பு ரிலையன்ஸ்
    மனைவி பிரிந்ததால் விரக்தி; கர்நாடகாவில் திருமணம் செய்து வைத்த தரகரை கொலை செய்த கணவர் கர்நாடகா

    தெலுங்கு திரையுலகம்

    விபத்தில் சிக்கிய புஷ்பா 2 படக்குழு! அதிர்ச்சியில் ரசிகர்கள்  தெலுங்கு படங்கள்
    என்னது பாகுபலி படத்திற்கு 400 கோடி ரூபாய் கடன்வாங்கப்பட்டதா? வெளிப்படுத்திய ராணா டகுபதி தமிழ் திரைப்படம்
    நடிகர் பிரபாஸ் திருமணம் குறித்து அவரே வெளியிட்ட புதுத்தகவல்;  கொண்டாட்டத்தில் ரசிகர்கள்  பிரபாஸ்
    பெண் குழந்தைக்கு அப்பாவானார் தெலுங்கு நடிகர் ராம் சரண்  ராம் சரண்

    தற்கொலை

    கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை  கோவை
    கோவை DIG தற்கொலைக்கான காரணம் இதுதான்: டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் கோவை
    முந்தைய நாளே தற்கொலைக்கு தயாரான கோவை டிஐஜி - பரபரப்பு தகவல்  கோவை
    கோவை டி.ஐ.ஜி.விஜயகுமார் தற்கொலை வழக்கு - 8 பேருக்கு சம்மன்  காவல்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025