புதிய வெளியீட்டு தேதியுடன் புஷ்பா 2 டீஸர் வெளியானது
செய்தி முன்னோட்டம்
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான புஷ்பா 2: தி ரூல் வெளியீட்டு தேதியை நேற்று போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்தது.
டிசம்பர் 6 ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்ட இப்படம், தற்போது ஒரு நாள் முன்னதாக டிசம்பர் 5 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த புதிய வெளியீட்டு தேதியுடன் கூடிய டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அது கடந்த ஏப்ரல் மாதம் அல்லு அர்ஜுனின் பிறந்தநாள் அன்று வெளியான அதே டீஸர் தான்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
The promotions of the Biggest Indian Film begin with a grand press meet 💥💥#Pushpa2TheRule GRAND RELEASE WORLDWIDE ON 5th DECEMBER, 2024 ❤🔥#Pushpa2TheRuleOnDec5th 🔥🤙
— Pushpa (@PushpaMovie) October 25, 2024
Icon Star @alluarjun @iamRashmika @aryasukku #FahadhFaasil @ThisIsDSP @SukumarWritings @MythriOfficial… pic.twitter.com/xW7KoK4UT9
விவரங்கள்
புஷ்பா 2 குறித்து கூடுதல் விவரங்கள்
புஷ்பா 2: தி ரூல் என்பது புஷ்பா: தி ரைஸ் படத்தின் தொடர்ச்சியாகும். முதல் பாகத்தில் நடித்தமைக்கு அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. சுகுமார் இயக்கயுள்ள இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
புஷ்பா இரண்டு பாகங்களிலும் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் ஃபஹத் ஃபாசில் நடித்துள்ளார்.
500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இதுவரை தயாரிக்கப்பட்ட இந்திய படங்களில் புஷ்பா 2 மிகவும் விலை உயர்ந்தது என்று கூறப்படுகிறது.