LOADING...
ரஜினிகாந்த் -கமல்ஹாசன் இணையும் 'Thalaivar 174' ப்ரோமோ படப்பிடிப்பு நிறைவு
'Thalaivar 174' ப்ரோமோ படப்பிடிப்பு நிறைவு

ரஜினிகாந்த் -கமல்ஹாசன் இணையும் 'Thalaivar 174' ப்ரோமோ படப்பிடிப்பு நிறைவு

எழுதியவர் Venkatalakshmi V
Feb 09, 2026
06:43 pm

செய்தி முன்னோட்டம்

ரஜினிகாந்த்- கமல்ஹாசன் இணைந்து நடிக்கவிருக்கும் படத்தை பற்றிய அப்டேட்டுகள் இணையத்தில் வெளியான வண்ணம் உள்ளது. இந்த படத்தை இயக்கப்போவது நெல்சன் திலீப்குமார் என பல ஊடகங்கள் செய்தி வெளியிட்ட போதும், அதிகாரபூர்வ அறிக்கை இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் மற்றுமொரு லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்திய தகவல்களின்படி, இந்த படத்திற்கான சிறப்பு ப்ரோமோ வீடியோ ஷூட்டிங் நிறைவடைந்து விட்டது. அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் இருவரும் அவர்களது பொற்காலமான 1980-களின் தோற்றத்தில் (80's Look) தோன்றவுள்ளனர். இதற்காக அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் ஒரு மெக்கானிக் ஷெல்ட் அமைப்பில் இதற்கான படப்பிடிப்பு சத்தமில்லாமல் நடந்து முடிந்துள்ளது என வலைப்பேச்சு கூறியுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement