Page Loader
அந்தகன் முதல் பாடல் வெளியானது..ஆனால் படத்திற்கு இசையமைத்தது சந்தோஷ் நாராயணன் இல்லையா?
இதனை நடிகர் விஜய் வெளியிட்டார்

அந்தகன் முதல் பாடல் வெளியானது..ஆனால் படத்திற்கு இசையமைத்தது சந்தோஷ் நாராயணன் இல்லையா?

எழுதியவர் Venkatalakshmi V
Jul 25, 2024
09:51 am

செய்தி முன்னோட்டம்

நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த பிரஷாந்தின் 'அந்தகன்' படத்தின் முதல் பாடல் 'அந்தகன் ஆன்தம்' நேற்று வெளியானது. இதனை நடிகர் விஜய் வெளியிட்டார். இப்படத்திற்கு இசையமைத்திருப்பது சந்தோஷ் நாராயணன் என குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் பாடல் வெளியான சில மணி நேரத்திலேயே சந்தோஷ் நாராயணன் எக்ஸ்-இல் ஓர் பதிவை இட்டிருந்தார். அதில், அவர், "வரலாற்றில் முதன்முறையாக, ஆடியோ லேபிளும் ஒரு குருட்டு கதாபாத்திரத்தில் நடிக்கிறது. FYI உண்மையான இசை/பாடல்/அமைப்பு/மிக்ஸ்/மாஸ்டர் உண்மையில் என்னுடையதா என்பதைச் சரிபார்க்க நான் கட்டணம் வசூலிப்பதில்லை." என பதிவிட்டிருந்தார்.

ட்விட்டர் அஞ்சல்

பாடலுக்கு இசை....

எதிர்வினை

சானா-வின் டீவீட்டினால் குழம்பிய ரசிகர்கள்

சந்தோஷ் நாராயணன் டீவீட்டினால் தற்போது ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். முதல் பாடலின் போஸ்டரில், சந்தோஷ் நாராயணன் பெயர் விடுபட்டுள்ளதையும், இசையை வெளியிட்ட சோனி சவுத் ம்யூசிக்கின் பதிவிலும் அவரின் பெயர் டேக் செய்யப்படாமல் இருப்பதையே அவர் தெரிவிக்கிறார் என ஒரு சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஒரு ரெட்டிட் பயனர், இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவில்லை என்பதையே அவர் சூசகமாக தெரிவிக்கிறார் எனவும் கூறியுள்ளார். இதற்கான சரியான விளக்கம் தயாரிப்பு தரப்பிலிருந்து வர வேண்டும் எனவும் கூறுகின்றனர் சானாவின் ரசிகர்கள். வெளியான அந்தகன் முதல் பாடலை பாடியது அனிருத் என்பது குறிப்பிடத்தக்கது.