
பிரதீப் ரங்கநாதனின் அடுத்த அவதாரம்... Dude பட தயாரிப்பாளர்கள் வெளியிட்ட அறிவிப்பினால் ஆச்சரியத்தில் ரசிகர்கள்
செய்தி முன்னோட்டம்
இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக நடித்து வெளியீட்டிற்கு தயாராகி வரும் திரைப்படம் Dude. 2025 தீபாவளிக்கு இந்த திரைப்படம் வெளியாகும் என தயாரிப்பாளர்கள் ஏற்கனவே அறிவித்து விட்டனர். படத்திலிருந்து இரண்டு பாடல்களும் வெளியாகி விட்டன. சாய் அபயங்கர் இசையில் உருவான இந்த பாடல்கள் ஏற்கனவே சர்ட் பஸ்டர் ஹிட்ஸ்! இந்த நிலையில் படத்தின் மூன்றாவது பாடல் குறித்த ப்ரோமோ இன்று வெளியானது. அதில் தான் ட்விஸ்ட்! இந்த பாடலை பாடியிருப்பது பிரதீப் ரங்கநாதன். இந்த செய்தியை அறிந்ததும் ரசிகர்கள் ஆச்சரியத்துடனும், ஆர்வத்துடனும் அந்த பாடலுக்காக காத்து உள்ளனர். அறிவிப்பின் படி, மூன்றாவது பாடல் நாளை வெளியாகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#Dude Third Single sung by PradeepRanganathan himself🎙️
— AmuthaBharathi (@CinemaWithAB) October 3, 2025
Fun Promo between Pradeep & SaiAbhyankkar 😂pic.twitter.com/RGBOQ199Rb
விவரங்கள்
Dude திரைப்பட விவரங்கள்
அறிமுக இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகி உள்ள ட்யுட் திரைப்படம் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. ரொமான்டிக் ஆக்க்ஷன் படமாக உருவாகி இருக்கும் Dude படத்தில், 'ப்ரேமலு' புகழ் மமிதா பைஜூ நாயகியாக நடித்துள்ளார். இது அவரது முதல் நேரடி தமிழ் திரைப்படமாகும். இந்த படத்தில் சரத் குமார், ரோகினி ஆகியோரும் நடித்துள்ளனர். அதே நேரத்தில் தீபாவளிக்கு பிரதீப்பின் மற்றொரு படமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள LIK திரைப்படமும் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, கௌரி கிஷன், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். LIK-விற்கு இசையமைத்திருப்பது அனிருத்.