Page Loader
பிரபாஸ், மோகன்லால் நடிக்கும் கண்ணப்பா  டீஸரை வெளியிட்ட பிரபுதேவா

பிரபாஸ், மோகன்லால் நடிக்கும் கண்ணப்பா  டீஸரை வெளியிட்ட பிரபுதேவா

எழுதியவர் Venkatalakshmi V
Mar 01, 2025
12:19 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் பிரபாஸ், மோகன்லால், சரத்குமார், மதுபாலா, அக்ஷய் குமார், காஜல் அகர்வால் என மாபெரும் நடிகர் பட்டாளம் நடிக்கும் 'கண்ணப்பா' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ஹிந்து இதிகாசத்தில் இடம்பெற்றுள்ள சிறப்புமிக்க நாயன்மார்களில் ஒருவர் கண்ணப்பர். பல மொழிகளில் வெளியாகும் இந்த படத்தின் தமிழ் ட்ரைலரை நடிகர் பிரபு தேவா தற்போது வெளியிட்டுள்ளார். இப்படத்தை தெலுங்கு பட நடிகர் மோகன் பாபு தயாரிக்க, முகேஷ் குமார் சிங் இயக்குகிறார். இவர் இது போன்ற பல இதிகாச தொடர்களை TVயில் இயக்கிய அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2023ஆம் பூஜையுடன் தொடங்கிய இந்த படத்தில் முன்னணி வேடத்தில், கண்ணப்ப நாயனராக நடிக்கிறார் விஷ்ணு மன்சு. இப்படம் ஏப்ரல் 25ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post