முதல்வர் கருணாநிதிக்காக, வைரமுத்து எழுதிய பாடல்
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நூற்றாண்டு விழா இந்த வருடம் கொண்டாடப்படுகிறது. அவருக்கென கொண்டாட்டங்கள் பலவற்றை தமிழக அரசு ஏற்பாடு செய்து கொண்டிருக்கும் வேளையில், தி.மு.க விற்கும், மறைந்த முதல்வர் கருணாநிதிக்கும் நெருக்கமான கவிஞர் வைரமுத்து, ஒரு கவிதை எழுதியுள்ளார். அதை தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும் எனவும், அதற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த பாடலை பாடியிருப்பது, யாசின். இதனிடையே, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு பன்னோக்கு மருத்துவமனையை திறக்கவிருக்கிறார். கிண்டி கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள அந்த புதிய கட்டடத்தின் திறப்பு விழாவின்போது, இந்த பாடல் வெளியிடப்படும் என தெரியவில்லை.