"என் குழந்தைகளை தொல்லை செய்யாதீர்கள்": நடிகை ப்ரீத்தி ஜிந்தா காட்டம்
செய்தி முன்னோட்டம்
பிரபல நடிகை ப்ரீத்தி ஜிந்தா, திருமணத்திற்கு பிறகு, படவுலகை விட்டு சற்று ஒதுங்கியே இருக்கிறார். இவர் அமெரிக்காவில் வாழ்ந்து வந்தாலும், IPL போட்டிகளின் போது, இவர் 'பஞ்சாப் சூப்பர் கிங்ஸ்' அணியின் உரிமையாளர் ஆகையால், இந்தியாவிற்கு வருகை தருகிறார்.
அதுபோல, தற்போது நடைபெற்று வரும் IPL போட்டிகளை காண, தன்னுடைய குழந்தையுடன், இந்தியா வந்திருந்தார்.
அப்போது நடைபெற்ற இரு துரதிருஷ்டவசமான சம்பவங்களை பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விரிவாக எழுதி இருந்தார்.
அதன்படி, ப்ரீத்தி ஜிந்தாவும், அவரது மகள் ஜியாவும் ஒரு பார்க்கில் விளையாடி கொண்டிருந்த போது, திடீரென்று எங்கிருந்தோ வந்த ஒரு பெண்மணி, குழந்தையின் கையை பிடித்து இழுத்து, கன்னத்தில் முத்தமிட்டதாகவும், அது தன்னையும், தனது குழந்தையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ப்ரீத்தி ஜிந்தா
"எங்கள் தரப்பில் இருக்கும் நியாயத்தை பார்ப்பதே இல்லை"
இன்னொரு சம்பவத்தில், ப்ரீத்தி அவசரமாக ஏர்போர்ட் செல்ல காரில் ஏறும்போது, உடல்ஊனமுற்ற நபர் ஒருவர், வேகமாக அவரின் காரை தட்டியதாகவும், தான் அளித்த பணம் போதவில்லை என தூக்கி வீசியதாகவும், இன்னும் பணம் வேண்டும் என ப்ரீத்தியின் காரை துரத்திக்கொண்டே வந்ததாகவும் கூறினார்.
"ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருந்தால், ஊடகத்துறையினர, உடனே நடிகர் நடிகையரை குறைகூற முற்படுவார்களே தவிர, எங்கள் தரப்பு நியாயத்தை கேட்பதே இல்லை" என அவர் வருத்தத்துடன் கூறினார்.
சான்றாக ஒரு வீடியோவையும் இணைத்துள்ளார், ப்ரீத்தி.
இறுதியாக, "எல்லோரையும் போல, என் வாழ்க்கையை, என் விருப்பப்படி வாழ, எனக்கு உரிமை உள்ளது. என்னுடைய குழந்தைகளின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிட யாருக்கும் அனுமதி இல்லை. அவர்களை குழந்தைகளாவே வளர அனுமதியுங்கள்" எனவும் கூறியுள்ளார்.