தலைவர் 173: சுந்தர் சி வெளியேறியபின், ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்கவிருக்கும் இயக்குனர் யார்?
செய்தி முன்னோட்டம்
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகவிருந்த தலைவர் 173 திரைப்படம், இயக்குநர் சுந்தர் சி திடீரென விலகியதையடுத்து செய்திகளில் இடம் பிடித்தது. அடுத்ததாக ரஜினியை யார் இயக்குவார் என்ற கேள்விக்கு பல யூகங்கள் வெளியாகின. தற்போது இணையத்தில் கசிந்த செய்திகளின்படி, தேசிய விருது வென்ற பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் தான் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப்போகிறாராம். இவரது இயக்கத்தில் பார்க்கிங் திரைப்படம் சிறந்த திரைக்கதை, சிறந்த திரைப்படம் மற்றும் துணை நடிகர் என மூன்று பிரிவுகளில் தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது. முன்னதாக தலைவர் 173 திரைப்படத்தை தனுஷ் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இளம் இயக்குனர்
கதை நன்றாக இருந்தால் இளம் இயக்குனருக்கும் வாய்ப்பு
சுந்தர் சி விலகியது குறித்துப் பேசிய தயாரிப்பாளர் கமல்ஹாசன், "சுந்தர் சி தனது விலகலுக்கானக் காரணத்தை ஒரு பத்திரிகைச் செய்திக் குறிப்பு மூலம் விளக்கியுள்ளார். என் நட்சத்திரமான ரஜினிகாந்திற்குத் திருப்தி அளிக்கும் கதையைத் தேடுவதுதான் ஒரு தயாரிப்பாளராக எனது வேலை. தரமானக் கதையை இறுதி செய்யும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளோம்." என்று தெரிவித்தார். மேலும், ஒரு இளம் இயக்குநரைக் கூடக் கருத்தில் கொள்ளலாம் என்றும், எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்றும் அவர் கூறியது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து 46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் இந்தப் படம், முன்னர் அறிவித்தபடி பொங்கல் 2027 அன்று வெளியாகுமா?