ஆம் ஆத்மி தலைவர் ராகவ் சாதாவை கரம் பிடித்தார் 'பாலிவுட்' நடிகை பரினீதி சோப்ரா
ஆம் ஆத்மி கட்சித் தலைவர் ராகவ் சாதாவும், பிரபல 'பாலிவுட்' நடிகை பரினீதி சோப்ராவும் இன்று திருமணம் செய்து கொண்டனர். இன்று உதய்பூரில் உள்ள லீலா பேலஸில் வைத்து அவர்களது திருமணம் நடைபெற்றது. குடும்பத்தினர் மட்டும் கலந்துகொண்ட அவர்களது திருமண விழாவின் போது, மணமகள் பரினீதி சோப்ரா, பிரபல வடிவமைப்பாளர் மணீஷ் மல்ஹோத்ரா வடிவமைத்த ஆடையை அணிந்திருந்தார். 'மிஸ்டர்' அண்ட் 'மிஸஸ்' ஆக ராகவ் மற்றும் பரினீதியை முதல்முறையாக காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால், அவர்கள் இருவரும் இன்னும் சமூக ஊடகங்களில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. இந்த திருமண நிகழ்ச்சியில், ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.