ஆஸ்கார் விருது 2024: சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றார் ராபர்ட் டௌனி ஜூனியர் (ஓப்பன்ஹெய்மர்)
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் நடைபெற்று வரும் 96வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் ஹாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த விருதுகள் பட்டியலில், கடந்த ஆண்டு வெளியான ஓப்பன்ஹெய்மர் திரைப்படத்தில் லெவிஸ் ஸ்ட்ராஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தமைக்காக ராபர்ட் டௌனி ஜூனியருக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டது. அதேபோல, சிறந்த துணை நடிகைக்கான விருதை, 'தி ஹோல்டு ஓவெர்ஸ்' திரைப்படத்தில் நடித்ததற்காக டாவின் ஜாய் ரெண்டோல்ஃப் பெற்றார். முன்னதாக ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரைகள் பட்டியலில் கிறிஸ்டோபர் நோலனின் பிரபலமான 'ஓப்பன்ஹெய்மர்' திரைப்படம் பல பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த படத்துடன் வெளியான 'பார்பி' திரைப்படம், சிறந்த இயக்குனர் மற்றும் நடிகைக்கான பிரிவில் பரிந்துரைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.