ஆஸ்கார்ஸ் 2024: சிறந்த திரைப்படமாக ஓப்பன்ஹெய்மர் தேர்வு
96வது ஆஸ்கார் விருதுகளில், சிறந்த திரைப்படமாக கிறிஸ்டோஃபர் நோலனின் ஓப்பன்ஹெய்மர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதோடு, சிறந்த இயக்குனர் விருது, கிறிஸ்டோஃபர் நோலனிற்கும், சிறந்த நடிகருக்கான விருது இப்படத்தின் நாயகன் சிலியன் மர்பியும் வென்றனர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் நடைபெற்று வரும் 96வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் ஹாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இதை விழாவில், கடந்த ஆண்டு வெளியான ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் பல விருதுகளை குவித்தது. லெவிஸ் ஸ்ட்ராஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தமைக்காக ராபர்ட் டௌனி ஜூனியருக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும், சிறந்த இசைக்கான விருது, சிறந்த ஒளிப்பதிவு உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளது இந்த திரைப்படம்.