
'ஓபன்ஹைய்மர்' திரைப்படத்தில் வரும் பகவத் கீதை காட்சிகளால் பரபரப்பு
செய்தி முன்னோட்டம்
உலகின் முதல் அணுகுண்டை உருவாக்கிய ராபர்ட் ஓபன்ஹைமரின் வாழ்க்கை வரலாறு 'ஓபன்ஹைய்மர்' என்ற ஹாலிவுட் திரைப்படமாக வெளியாகி இருக்கிறது.
'இன்டெர்ஸ்டெல்லார்', 'இன்செப்ஷன்', 'தி டார்க் நைட்' போன்ற புகழ்பெற்ற திரைப்படங்களை இயக்கிய கிறிஸ்டோபர் நோலன் இந்த திரைப்படத்தையும் இயக்கி உள்ளார்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்த திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் உடலுறவு காட்சிகளில் பகவத் கீதை வாசிக்கப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஓபன்ஹைய்மர் திரைப்படத்தின் ஒரு காட்சியில் ராபர்ட் ஓப்பன்ஹெய்மர்(சிலியன் மர்பி) உடலுறவு கொள்ளும்போது பகவத் கீதையை வாசிக்கிறார்.
இதற்கு இந்திய ரசிகர்கள் பெரும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
சி
சம்பந்தப்பட்டவர்களை கடுமையாகத் தண்டிக்க கோரும் அமைப்புகள்
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் இந்திய அரசாங்கத்தின் தகவல் ஆணையர் உதய் மஹூர்கர், "இந்தக் காட்சிகளுக்கு மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம்(CBFC) எப்படி ஒப்புதல் அளித்தது என்பது தான் குழப்பமாக இருக்கிறது." என்று கூறியுள்ளார்.
மேலும், 'சேவ் கல்ச்சர் சேவ் இந்தியா அறக்கட்டளை'யின் செய்திக்குறிப்பையும் அவர் பகிர்ந்துள்ளார்.
அந்த செய்திக்குறிப்பில் "இந்த படத்தின் ஒரு காட்சியில் ஒரு பெண் ஒரு ஆணிடம் பகவத் கீதையை உரக்கப் படிக்க சொல்வது போலவும், உடலுறவில் ஈடுபடுவது போலவும் காட்டப்பட்டுள்ளது. இதை I & B அமைச்சகம் அவசர அடிப்படையில் விசாரித்து, சம்பந்தப்பட்டவர்களை கடுமையாகத் தண்டிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.