
தனது பெற்றோர்களின் பிரிவு குறித்து மனம் திறந்த கவுதம் கார்த்திக்
செய்தி முன்னோட்டம்
நடிகர் கவுதம் கார்த்திக், பிரபல நடிகர் கார்த்திக்கின் மகன் என்பது அனைவரும் அறிந்ததே.
அவர் மணிரத்னம் இயக்கத்தில் 'கடல்' என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார்.
அவர், நடிகை மஞ்சிமா மோஹனை சென்ற ஆண்டு காதலித்து, திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் பிரபல யூடுபரான மதன் கௌரியின் யூட்யூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை தந்திருந்தார்.
அந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் மதன் கௌரி, பெற்றோர்கள் பிரியும்போது, ஒரு குழந்தையின் மனநிலை எப்படி இருக்கும் எனவும், அதிலிருந்து மீண்டு வர என்ன செய்யவேண்டும் எனவும் கேட்டார்.
தொடர்ந்து, கவுதம் கார்த்திக் வாழ்க்கையிலும் அது நடந்துள்ளதே எனவும், அதனால் அவரின் தனிப்பட்ட கருத்து என்ன என்பதையும் கேட்டார்.
card 2
ராகினியின் தங்கையை திருமணம் செய்து கொண்ட கார்த்திக்
நடிகர் கார்த்திக், நடிகை ராகினி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், சில வருடங்களிலேயே அவரை விவாகரத்து செய்து விட்டு, ராகினியின் தங்கையையே திருமணம் செய்து கொண்டார்.
இதுகுறித்து பேசிய கவுதம், "இருவரும் பிரிந்த போது எனக்கு 9 வயது. அப்பா ரொம்ப பிஸி. வருஷத்துல 2 தடவ போன் பண்ணுவார். ஒரு தடவ பாக்க வருவார். அவர் சென்னைல இருந்தார். நானும் தம்பியும் அம்மாவுடன் இருந்தோம். அம்மா ஒரு சிங்கிள் மதராக எங்களை வளர்க்க ரொம்ப கஷ்டப்பட்டாங்க. அப்பா அம்மா பிரிஞ்சபோது ரொம்ப ஒடைஞ்சுபோனேன். ஆனா என் நண்பர்கள் தான் எனக்கு ஒரே சப்போர்ட். அவங்க இருந்ததால தான் என்னால அதிலிருந்து வெளிய வர முடிஞ்சுது" எனக்கூறினார்.