Page Loader
2022-ல் தமிழ் ரசிகர்களை அதிகம் கவர்ந்த புதுமுக நாயகிகள்
2022-ல் ரசிகர்களை கவர்ந்த புதிய அறிமுகங்கள்

2022-ல் தமிழ் ரசிகர்களை அதிகம் கவர்ந்த புதுமுக நாயகிகள்

எழுதியவர் Saranya Shankar
Dec 27, 2022
10:10 pm

செய்தி முன்னோட்டம்

இந்த வருடம் மட்டும் தமிழில் திரையரங்குகள் மற்றும் ஒடிடி தளத்தில் 220 படங்கள் வெளியாகியுள்ளன. வெளிவந்த படங்களில் புதிய முகங்களாக பலர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ளனர். அவ்வாறு அறிமுகமாகி வெளிவந்த நடிகைகளில் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்கள் யார் என்பதை பார்ப்போம். அதன்படி தெலுங்கில் உப்பெனா படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி ஷெட்டி குறுகிய காலத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். புல்லட் பாடல் மூலம் பிரபலமான இவர், பாலா இயக்கத்தில் உருவாகி கொண்டு இருக்கும் வணங்கான் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி உள்ளார். கே.ஜி.ப் படத்தின் புகழ் ஸ்ரீநிதி செட்டி இந்த வருடம் கோப்ரா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இவர் பார்வையாளர்களின் கவனத்தை பெற்று அதிக ரசிகர்களை ஈர்த்துள்ளர்.

புதிய அறிமுகங்கள்

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற டாப் அறிமுகங்கள்

இயக்குனர் ஷங்கரினின் மகளான அதிதி ஷங்கர் விருமன் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகி உள்ளார். இப்படத்தில் இவர் நல்ல வரவேற்பை பெற்றதால் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி கொண்டு இருக்கும் மாவீரன் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் சித்தி இட்னானி. குறைவான காட்சிகளில் வந்திருந்தாலும் இயல்பான நடிப்பினால் இவர் ரசிகர்களை ஈர்த்துள்ளார். இவர் ஏற்கனவே தெலுங்கில் மூன்று படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அடுத்தாக நூறு கோடி வானவில் படத்திலும் மற்றும் ஆர்யாவிற்கு ஜோடியாக இன்னும் பெயரிடப்படாத படமான 'ஆர்யா 32' படத்திலும் நடித்து கொண்டு இருக்கிறார்.