நடிகை ரேவதியின் புதிய பரிமானத்தில் வெளியாகும் 'டூத் பரி: வென் லவ் பைட்ஸ்'
செய்தி முன்னோட்டம்
இந்திய திரையுலகில், நடிகையிலிருந்து, இயக்குநராகி ஜெயித்தவர்கள் வெகு சிலரே. அவர்களில், ரேவதிக்கு முக்கிய இடம் உண்டு. இன்றும் அவர், நடிகையாகவும், இயக்குனராகவும் இரு குதிரைகளில் சவாரி செய்கிறார்.
பாரதிராஜா கண்டெடுத்த முத்துக்களில், ரேவதியும் ஒருவர்.
எழுத்தாளர், பேச்சாளர், திரைக்கதாசிரியர், நடிகை, இயக்குனர் என பல அவதாரங்களை எடுத்துள்ள ரேவதி, தற்போது, நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவிருக்கும் புதிய வெப் சீரீஸில் நடிக்கவிருக்கிறார்.
'டூத் பரி: வென் லவ் பைட்ஸ்' என்று பெயரிடப்பட்டிருக்கும் அந்த தொடர், வரும் ஏப்ரல் 20 முதல் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை பற்றிய அறிவிப்பையும், ரேவதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ரேவதி
சவாலான கதாபாத்திரத்தில் நடக்கும் ரேவதி
இது குறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், "நான் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு படம் குறித்தும் நிறைய யோசிப்பேன். 'டூத் பரி: வென் லவ் பைட்ஸ்' சீரிஸும் இதற்கு விதிவிலக்கல்ல. நான் ஸ்கிரிப்டைக் கேட்டபோது, இதுவரை நான் பயணிக்காத புதிய ஜானர் இது என்பதை அறிந்துகொண்டேன்." என கூறியுள்ளார்.
"இது வழக்கமான கதையல்ல; கொல்கத்தாவில் நடக்கும் வித்தியாசமான கற்பனைக் கதை. இதனை ப்ரதீம் தாஸ்குப்தா இயக்கியிருக்கிறார்".
"இந்த சீரிஸில் நம்பிக்கைகளில் உறுதியாக நின்று, மற்ற எல்லா முரண்களையும் எதிர்த்து போராடும் ஒருவரின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இதுபோன்ற கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு எப்போதும் விருப்பமானது ஆகும்" என அவர் மேலும் கூறியுள்ளார்.