'ஹரா' திரைப்படத்தில் நடிக்கும் சாருஹாசன்
தமிழ் திரைப்படங்கள் 'தாதா 87', 'பவுடர்' உள்ளிட்டவைகளை இயக்கிய இயக்குனர் விஜய் ஸ்ரீ தற்போது இயக்கும் படம் தான் 'ஹரா'. இப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மோகன் நடிக்கிறார், யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், குஷ்பூ, உள்ளிட்ட பலர் இதில் நடித்து வருகிறார்கள். அரசியல்வாதியாக வனிதா விஜயகுமாரும், எதிர்மறை கதாபாத்திரத்தில் சுரேஷ் மேனனும் நடிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தின் டீஸர் இணையத்தில் வெளியாகி மக்களின் கவனத்தினை ஈர்த்துள்ளது. இப்படத்தின் பணிகள் மிக மும்முரமாக தற்போது நடந்துவருகிறது. இதனிடையே இப்படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், உலகநாயகன் கமல்ஹாசன் அண்ணன் சாருஹாசன் தனது 93 வயதில் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறாராம். இதுகுறித்த தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது குறிப்பிடத்தக்கது.