NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 'லியோ' படத்தின் அடுத்த அப்டேட் - புஸ்ஸி ஆனந்த் 
    'லியோ' படத்தின் அடுத்த அப்டேட் - புஸ்ஸி ஆனந்த் 
    பொழுதுபோக்கு

    'லியோ' படத்தின் அடுத்த அப்டேட் - புஸ்ஸி ஆனந்த் 

    எழுதியவர் Nivetha P
    September 09, 2023 | 05:42 pm 1 நிமிட வாசிப்பு
    'லியோ' படத்தின் அடுத்த அப்டேட் - புஸ்ஸி ஆனந்த் 
    'லியோ' படத்தின் அடுத்த அப்டேட் - புஸ்ஸி ஆனந்த்

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் 'லியோ'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கிறார், அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட முக்கியமானோர் நடித்துள்ளனர். வரும் அக்டோபர் மாதம் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் ரிலீஸிற்கு முன்னரே ஓடிடி, விநியோக உரிமம், இசை உரிமம் என ரூ.400 கோடி வசூலினை எட்டியுள்ளது என்று கூறப்படுகிறது. இதனிடையே முன்னதாக இப்படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் மாதத்தில் மதுரையில் நடக்கும் என்று கூறப்பட்டது.

    அனுமதி சீட்டுகளை மாவட்ட நிர்வாகிகளிடம் பெற்றுக்கொள்ளலாம் 

    அதன் பின்னர் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் மிக பிரம்மாண்டமாக நடத்தப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த புதிய அப்டேட்டினை விஜய் மக்கள் இயக்க தலைவர் புஸ்ஸி ஆனந்த் அண்மையில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, "இம்மாதம் 23ம் தேதியன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கவுள்ளது" என்றும், "அதற்கான அனுமதி சீட்டுகள் மாவட்ட நிர்வாகிகளிடம் வாங்கி கொள்ளலாம்" என்றும் தெரிவித்துள்ளார். விஜய் மக்கள் இயக்க மகளிர் அணி ஆலோசனை கூட்டம் அண்மையில் நடந்தது. அந்த ஆலோசனை கூட்டம் முடிந்து வெளியில் வந்த புஸ்ஸி ஆனந்த் இது குறித்த தகவலினை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    விஜய்
    அனிருத்
    சென்னை

    விஜய்

    ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் கோலிவுட்டின் ஸ்டார் கிட்ஸ் இடம்பெறுவார்கள் எனத்தகவல் கோலிவுட்
    அடுத்த வாரம் லியோ அப்டேட்: அனிருத் சொன்ன குட் நியூஸ் அனிருத்
    தளபதி 68: விஜய்யுடன் மீண்டும் இணையும் பிரபுதேவா; முக்கிய வேடத்தில் பிரஷாந்த்? இயக்குனர்
    ரசிகனாக மாறிய நடிகர் விஜய் - புகைப்படம் வெளியிட்ட வெங்கட் பிரபு  ஏஜிஎஸ்

    அனிருத்

    ஜெயிலர் வெற்றி: லாபத்தை அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸிற்கு நன்கொடையாக அளித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம்  ஜெயிலர்
    ஜெயிலர் BO கொண்டாட்டம்: இசையமைப்பாளர் அனிருத்திற்கு காசோலை வாங்கிய சன் பிக்ச்சர்ஸ்  ஜெயிலர்
    525 கோடி தாண்டி வசூல் ஈட்டி வரும் 'ஜெயிலர்' திரைப்படம் ஜெயிலர்
    இசையமைப்பாளர் அனிருத் காட்டில் மழை; ஷாருக்கானை தொடர்ந்து, ஒரு மெகாஸ்டார் படத்தில் இணைகிறார் தெலுங்கு திரையுலகம்

    சென்னை

    வண்டலூர் உயிரியல் பூங்கா - 2 மடங்காக உயர்ந்த நுழைவு கட்டணம்  மாநில அரசு
    சென்னை மெட்ரோ குறித்த புதிய அப்டேட் கொடுத்த அதிகாரிகள்  மெட்ரோ
    ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார் செந்தில் பாலாஜி  செந்தில் பாலாஜி
    சென்னை ராணிமேரி கல்லூரியில் ரவீந்திரநாத் தாகூர் சிலை - தமிழக முதல்வர் திறந்து வைத்தார்  மு.க ஸ்டாலின்
    அடுத்த செய்திக் கட்டுரை

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023