
வெளியானது ஜெயிலர் திரைப்படத்தின் புதிய போஸ்டர்
செய்தி முன்னோட்டம்
நடிகர் ரஜினிகாந்த், நடிகை தமன்னா, நடிகர் யோகி பாபு, நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்திருக்கும் 'ஜெயிலர்' திரைப்படம், ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
இப்படத்தில், கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ் குமார் வில்லனாக நடித்துள்ளார்.
இதில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஒரு சிறப்பு காதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், அனிருத் இசையில், இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
இப்படத்தின் முதல் பாடலான 'காவாலா' ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இரண்டாவது பாடலான 'ஹுக்கும்' மற்றும் ஜெயிலர் திரைப்படத்தின் ட்ரைலர் ஆகியவை சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தி இருக்கிறது.
இந்நிலையில், ரஜினிகாந்த்-சிவராஜ் குமார் இருவரும் சேர்ந்து நிற்பது போன்ற ஒரு புதிய போஸ்டரை இப்படக்குழு வெளியிட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
ரஜினிகாந்த்-சிவராஜ் குமார் நிற்கும் புதிய ஜெயிலர் போஸ்டர்
Superstar - Shivanna 😎
— Sun Pictures (@sunpictures) August 6, 2023
Get ready to watch them together for the first time💥 4 more days to go for #Jailer@rajinikanth @NimmaShivanna @Nelsondilpkumar @anirudhofficial @Mohanlal @bindasbhidu @tamannaahspeaks @meramyakrishnan @suneeltollywood @iYogiBabu @iamvasanthravi… pic.twitter.com/y2oyXMdQMt