
விரைவில் பூந்தமல்லியில் பிலிம் சிட்டி: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
நடைபெற்று வரும் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழக நிதி அமைச்சர் திரைத்துறையினருக்கு ஒரு நற்செய்தி அறிவித்தார்.
அதன்படி, சென்னையை அடுத்த பூந்தமல்லியில் ரூ.500 கோடி செலவில் பிரம்மாண்ட திரைப்பட நகரம் அமைக்கப்படும் என அறிவித்தார்.
முன்னதாக கடந்த மாதம் திரைப்படத்துறையினரால் நடத்தப்பட்ட நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பூந்தமல்லியில் ரூ.140 கோடி செலவில் திரைப்பட நகரம் அமைக்கப்படும் என உறுதி அளித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக இந்த நிதியாண்டில் அதற்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
தற்போது படக்குழுவினர் அனைவரும் அண்டை மாநிலமான ஹைதராபாதில் அமைந்துள்ள ராமோஜி பிலிம் சிட்டிக்கு தான் படையெடுத்து வருகின்றனர்.
மேலும் சில தகவல்கள்
அதிநவீன வசதியுடன் கூடிய பிலிம் சிட்டி
இந்த நிலை மாறவேண்டும் என பல நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஏற்கனவே சென்னையின் புறநகர் பகுதியில் MGR பிலிம் சிட்டி, EVP பிலிம் சிட்டி மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் ARR பிலிம் சிட்டி ஆகியவை இருந்தாலும், அங்கு TV சீரியல்கள் மட்டுமே பெரும்பாலும் எடுக்கப்படுகிறது.
அல்லது லோ-பட்ஜெட் படங்களுக்கான படப்பிடிப்பு மட்டுமே நடைபெறுகிறது.
அமையவுள்ள பிலிம் சிட்டி, அதிநவீன வசதிகளுடன் உருவாக்கப்படும் என்றும், அரசு தனியார் பங்களிப்புடன் அது அமைக்கப்படும் எனவும் அமைச்சர் இன்று தெரிவித்துள்ளார்.