NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / அஞ்சலியை பிடித்து தள்ளிய பாலைய்யா..வைரலாகும் வீடியோ
    அடுத்த செய்திக் கட்டுரை
    அஞ்சலியை பிடித்து தள்ளிய பாலைய்யா..வைரலாகும் வீடியோ
    இந்த சம்பவத்தால் தற்போது கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளார் பாலகிருஷ்ணா

    அஞ்சலியை பிடித்து தள்ளிய பாலைய்யா..வைரலாகும் வீடியோ

    எழுதியவர் Venkatalakshmi V
    May 30, 2024
    01:57 pm

    செய்தி முன்னோட்டம்

    தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும், ரசிகர்களால் அன்பாக பாலைய்யா என்று அழைக்கப்படும் தயாரிப்பாளரும், அரசியல்வாதியுமான நந்தமுரி பாலகிருஷ்ணா, நடிகை அஞ்சலியை மேடையில் தள்ளிய சம்பவத்தால் தற்போது கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளார்.

    இந்த நிகழ்வு அஞ்சலியின் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் படமான கேங்க்ஸ் ஆஃப் கோதாவரியின் ப்ரீ-ரிலீஸ் விழாவில் நடந்தது.

    அந்த விழாவிற்கு பாலைய்யா தலைமை விருந்தினராக கலந்துகொண்டிருந்தார்.

    இந்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

    மேலும் இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஆன்லைனில் வைரலாக பகிரப்பட்டுள்ளது.

    அந்த வீடியோவில் மேடையின் மீது நடிகர்-நடிகைகள் நின்று கொண்டிருக்கும் போது, அஞ்சலியை சற்று நகருமாறு பாலையா தெரிவித்துள்ளார்.

    அதனை அஞ்சலி கவனிக்காததால், அவரை தள்ளிவிட்டுள்ளார் பாலைய்யா.

    எதிர்வினைகள்

    விமர்சிக்கப்படும் நடிகர் பாலகிருஷ்ணாவின் முன்கோபம்

    இந்த சம்பவத்தினை அஞ்சலி சாதாரணமாக எதிர்கொண்ட போதிலும், சமூக ஊடக பயனர்கள் பாலகிருஷ்ணாவின் நடத்தையை வன்மையாக கண்டித்தனர். மேலும் அவர் பெண்களை மதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

    பாலகிருஷ்ணா இது போன்ற நடத்தைக்காக விமர்சிக்கப்படுவது இது முதன்முறை அல்ல.

    முன்னதாக, ஜெய் சிம்ஹா படத்தில் அவருடன் பணிபுரிந்த இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், ஒரு தவறான புரிதலுக்க்காக உதவி இயக்குனரை பாலையா அறைந்த சம்பவத்தை சமீபத்தில் நினைவு கூர்ந்தார்.

    "AD மீது கோபமடைந்து கிட்டத்தட்ட அவரை அடித்தார் பாலகிருஷ்ணா. அவர் 'எதிர் கும்பலை' சேர்ந்தவர் என்றும் கூறினார். நான் தலையிட வேண்டியதாயிற்று" என்றார் ரவிக்குமார்.

    ட்விட்டர் அஞ்சல்

    அஞ்சலியை பிடித்து தள்ளிய பாலைய்யா

    Disgrace to Tollywood Industry ! pic.twitter.com/6nx6fkClVx

    — Let's X OTT GLOBAL (@LetsXOtt) May 29, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வைரல் செய்தி
    தெலுங்கு திரையுலகம்

    சமீபத்திய

    போர்ப்பதற்றம் காரணமாக ஐபிஎல் 2025 தொடர் நிறுத்தம்; பிசிசிஐ அறிவிப்பு ஐபிஎல் 2025
    பாகிஸ்தான் விமானப்படையின் AWAC-ஐ நேற்றிரவு இந்தியா சுட்டு வீழ்த்தியது: அதன் சிறப்புகள் என்ன? இந்தியா
    பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியிலும் கெத்தாக நிற்கும் இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன? பங்குச் சந்தை
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் காரணமாக CA தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன தேர்வு

    வைரல் செய்தி

    ரஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ புகாரில் பீகார் இளைஞரிடம் விசாரணை நடிகைகள்
    படப்பிடிப்பின் போது தன்னுடன் செல்பி எடுத்த சிறுவனை தாக்கிய நானா படேகர் பாலிவுட்
    சிறுவனை அடித்த சர்ச்சை வீடியோ குறித்து நானா படேகர் விளக்கம் திரைப்படம்
    இன்று திருமணம்: வருங்கால கணவருடன் கார்த்திகா நாயர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரல் சினிமா

    தெலுங்கு திரையுலகம்

    நடிகர் பிரபாஸ் திருமணம் குறித்து அவரே வெளியிட்ட புதுத்தகவல்;  கொண்டாட்டத்தில் ரசிகர்கள்  பிரபாஸ்
    பெண் குழந்தைக்கு அப்பாவானார் தெலுங்கு நடிகர் ராம் சரண்  ராம் சரண்
    தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி வீட்டில் தொடரும் விவாகரத்துகள்  பொழுதுபோக்கு
    ஜூலை 14 ஆம் தேதி, தெலுங்கில் வருகிறான் மாமன்னன்  உதயநிதி ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025