Loading...
அலியாஸ் ருக்மணி திருப்தி அளிக்கவில்லை என்றால் சினிமா தயாரிப்பதையே நிறுத்திவிடுவேன்: நடிகர் நானி சவால்
அலியாஸ் ருக்மணி திருப்தி அளிக்கவில்லை என்றால் சினிமா தயாரிப்பதையே நிறுத்திவிடுவேன் என நடிகர் நானி சவால்

அலியாஸ் ருக்மணி திருப்தி அளிக்கவில்லை என்றால் சினிமா தயாரிப்பதையே நிறுத்திவிடுவேன்: நடிகர் நானி சவால்

எழுதியவர் Vasuki
Nov 29, 2026
06:11 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் நானியின் யுனானிமஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் முரளிகாந்த் இயக்கத்தில் நடிகர் நிதின் நாயகனாக நடித்துள்ள தெலுங்குத் திரைப்படம் அலியாஸ் ருக்மிணி. ஆபியா சையத், சாய்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் வரும் டிசம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இதன் முன்வெளியீட்டு நிகழ்வு நேற்று ஐதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய தயாரிப்பாளர் நானி, "நான் இப்படத்தைத் தயாரிக்கவில்லை என்றாலும் கூட இதன் விளம்பர நிகழ்விற்கு வந்திருப்பேன்; திரையரங்கை விட்டு வெளியேறும்போது ஒரு அழகான படத்தைப் பார்த்த நிறைவு உங்களுக்கு ஏற்படவில்லை என்றால், இனி நான் திரைப்படங்களைத் தயாரிப்பதையே நிறுத்திவிடுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

நானி பாராட்டு

முரளிகாந்த் மற்றும் நிதினுக்கு வாழ்த்து

தொடர்ந்து பேசிய நானி, இயக்குநர் முரளிகாந்த் மிகச்சிறந்த எழுத்தாளர் என்றும், எளிமையான முறையில் கதையைச் சொல்லி வலுவான உணர்வுகளை ஏற்படுத்தும் தனித்துவம் அவரிடம் உள்ளதாகவும் பாராட்டினார்.

கதையைக் கேட்டபோது தாம் கற்பனை செய்ததை விடவும் மிகவும் அழகாக அவர் படத்தை உருவாக்கியுள்ளதாக நானி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

மேலும், 21 ஆண்டுகளாகத் தமக்குத் தெரிந்த நண்பர் நிதின், இப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தின் நுணுக்கங்களை உள்வாங்கி வெளிப்படுத்தியிருக்கும் விதம் தம்மை ஆச்சரியப்படுத்தியதாகவும், நிதினுக்கு 'அலியாஸ் ருக்மிணி' மிகச்சிறந்த கம்பேக் திரைப்படமாக அமையும் என்றும் நானி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT