Page Loader
விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி; முதல் பாடல் குறித்த அறிவிப்பை வெளியிட்ட விஜய் 
லியோ படத்தின் முதல் பாடல், விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என

விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி; முதல் பாடல் குறித்த அறிவிப்பை வெளியிட்ட விஜய் 

எழுதியவர் Venkatalakshmi V
Jun 16, 2023
05:53 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'. மற்ற விஜய் படங்கள் போலல்லாமல், இந்த படம் அறிவிக்கப்பட்டதிலிருந்து ஏகப்பட்ட எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. அதற்கு காரணம், விஜய்-லோகேஷ் காம்பினேஷனில் உருவான 'மாஸ்டர்' திரைப்படம் சக்கைபோடு போட்டது. அதன் பிறகு, லோகேஷ் இயக்கிய 'விக்ரம்' திரைப்படமும் பிரமாண்ட வெற்றி அடைந்தது. தற்போது, LCU எனப்படும் லோகேஷ் சினிமாடிக் யுனிவேர்சில் இந்த திரைப்படம் இணையுமா என்ற ஆவல், படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பை தந்துள்ளது. அதற்கேற்றார் போல,படத்தின் தயாரிப்பாளர்களும் அவ்வபோது அப்டேட்களை தந்துகொண்டே இருந்தனர்.

கார்டு 2 

விஜய்யின் பிறந்தநாள் சர்ப்ரைஸாக வெளியாகும் முதல் பாடல் 

நடிகர் விஜயின் பிறந்தநாளின் போது, அவர் நடிக்கும் படங்களின் அப்டேட் வெளிவரும். அதற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருப்பார்கள். இந்த முறை அவரின் ரசிகர்களுக்கு தரமான அப்டேட்டாக, 'லியோ' படத்தின் முதல் பாடல் வெளியாகவிருக்கிறது. இதில் கூடுதல் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இதை தளபதி விஜய், தானே, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். 'நா ரெடி' என துவங்கும் இந்த பாடல் என அறிவிக்கப்பட்டுள்ளது. 'லியோ' படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்தர். இவர் ஏற்கனவே விஜய்க்கு பல ஹிட் பாடல்கள் தந்த நிலையில், இந்த பாடல் எப்படி இருக்கபோகிறது என இபோதே ரசிகர்கள் யோசிக்க துவங்கி விட்டனர்.

Instagram அஞ்சல்

லியோ படத்தின் முதல் பாடல்