GV பிரகாஷின் 100வது திரைப்படம்..உருவாகும் வெற்றிக்கூட்டணி!
இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர் என தமிழ் சினிமா துறையில் பல அவதாரங்களை எடுத்து வருபவர் GV பிரகாஷ் குமார். மிக சிறிய வயதில் தேசிய விருது வென்ற இசையமைப்பாளர் இவரே. GV பிரகாஷ், தமிழ் சினிமா மட்டுமின்றி, மாற்ற மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். 2006 -இல், வசந்த பாலன் இயக்கத்தில் வெளியான 'வெயில்' திரைப்படம் மூலமாக தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கிய GV விரைவில் தனது 100-வது படத்திற்கு இசையமைக்க போகிறார். இது குறித்து அவரே தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். எனினும், அது என்ன திரைப்படம் என்பது குறித்து அவர் குறிப்பிடவில்லை. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் யூக அடிப்படையில் ஒரு சில படங்களின் கூட்டணி வெளியாகியுள்ளது.
சூரரை போற்று கூட்டணியா? அல்லது தெறி கூட்டணியா?
அதன்படி, சுதா கொங்கரா- சூர்யா இணையும் புது படம் தான் என ஒரு சாராரும், அட்லீ காம்போவில் உருவாகப்போகும் பாலிவுட் படம் தான் அது என மற்றொரு சாராரும் கூறி வருகின்றனர். சுதா கொங்கரா - சூர்யா இணையுடன் உருவான 'சுரரை போற்று' திரைப்படம் பல தேசிய விருதுகளை வென்றது. குறிப்பாக சிறந்த இசைக்கான தேசிய விருதை GV பிரகாஷிற்கு பெற்று தந்தது அத்திரைப்படம். மறுபக்கம், 'தெறி' படம் தான் GV -யின் 50வது படமாக அமைந்தது. அந்த வரிசையில், அதன் பாலிவுட் ரீமேக்கை அட்லீ இயக்கவிருக்கிறார். அதில் GV இசையமைத்தால், அது அவரது 100வது படமாக அமையும் என கூறுகிறார்கள்