
'நீயே ஒளி' : தமிழ் மொழிக்கு நினைவுச் சின்னம் அமைக்கும் பணியில் ஏ.ஆர்.ரஹ்மான்
செய்தி முன்னோட்டம்
இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானுக்கு தமிழ் மொழி மீது இருக்கும் ஆர்வம் பலரும் அறிந்திருப்பீர்கள். பல இடங்களில் அவர் தமிழ் மொழியின் மாண்பை வெளிக்காட்ட தவறியதில்லை.
அது தான் இசையமைக்கும் பாடலாகட்டும், ஆஸ்கார் மேடையாகட்டும்!
அவர் இசையமைத்த 'செம்மொழியான தமிழ் மொழி' என்ற ஆல்பம் பலரால் பாராட்டப்பட்டது.
அந்த வழியில் தற்போது அவர் தமிழுக்கு நினைவு சின்னம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக நேற்று ஒரு இன்ஸ்டா பதிவை வெளியிட்டார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#Updates | தமிழ் மொழிக்கு நினைவுச் சின்னம் அமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்!#SunNews | #Tamil | #ARRahman | @arrahman | @mkstalin pic.twitter.com/Shy5ljQoKv
— Sun News (@sunnewstamil) April 14, 2025
விவரங்கள்
AR ரஹ்மானின் தமிழ் சின்னம் குறித்து மேலும் விவரங்கள்
ஏ.ஆர். ரஹ்மானின் பதிவின்படி அவரும் அவரது ARR Immersive entertainment குழுவும் இணைந்து உருவாக்கிய தமிழ் நினைவு சின்னம் ஒன்றின் மாதிரி வடிவமைப்பு இடம்பெற்றது.
'நீயே ஒளி' என நுழைவு வாயில் மேல்பக்கம் எழுதபட்டுள்ளது. அதனை சுற்றி தமிழ் வாசகங்கள் மற்றும் எழுத்து வடிவங்கள் உள்ளது.
தமிழ் இலக்கியங்கள் குறிப்பிட்டு விளக்கப்படங்களாகவும், இன்னும் பல்வேறு புதிய வடிவங்களிலும் தமிழ் பெருமைகளை அவர் வழங்க உள்ளதாகவும் அந்த பதிவில் அவர் கூறியுள்ளார்.
ARR இம்மர்ஸிவ் என்டர்டெயின்மென்ட் குழு தமிழ் மொழிக்கான நினைவுச் சின்னத்தை உருவாக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
டிஜிட்டல் வடிவில் உள்ள இச்சின்னம், விரைவில் கட்டடமாக வரக்கூடும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.