LOADING...

"டாடி இஸ் ஹோம்!": 'டாக்ஸிக்' டீசரில் யஷ்ஷின் விஸ்வரூபம்; மிரட்டும் கோவா மாஃபியா உலகம்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 20, 2026
10:13 am

செய்தி முன்னோட்டம்

சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு யஷ் பெரிய திரைக்குத் திரும்பும் படம் என்பதால், இன்று காலை வெளியான இந்த டீசருக்காக ரசிகர்கள் தவம் கிடந்தனர். எதிர்பார்த்தபடியே, ரத்தம் தெறிக்கும் ஆக்ஷன் மற்றும் யஷ்ஷின் புதிய 'ராயா' கெட்டப் ரசிகர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது. டீசரின் இறுதியில் "டாடி இஸ் ஹோம்" (Daddy's home) என்று யஷ் பேசும் வசனம், கே.ஜி.எஃப்-ன் 'ராக்கி பாய்' இமேஜை மிஞ்சும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

கதை

Toxic படத்தின் விவரங்கள்

1940-களுக்கும் 1970-களுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், கோவாவின் பின்னணியில் ஒரு மாஃபியா சாம்ராஜ்யத்தை உருவாக்கும் 'ராயா' என்ற கதாபாத்திரத்தை சுற்றி இந்த கதை நகர்கிறது. கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் நயன்தாரா (கங்கா), கியாரா அத்வானி (நாடியா), ஹூமா குரேஷி (எலிசபெத்), தாரா சுதாரியா (ரெபெக்கா) மற்றும் ருக்மிணி வசந்த் (மெலிசா) என பெரும் நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது. வரும் மார்ச் 19 அன்று வெளியாகவுள்ள 'டாக்ஸிக்', அன்றைய தினமே வெளியாகும் ரன்வீர் சிங்கின் 'துரந்தர்: தி ரிவெஞ்ச்' படத்துடன் நேரடியாக மோதவுள்ளது. 2026-ஆம் ஆண்டின் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் மோதலாக இது கருதப்படுகிறது. மேலும், தமிழில் பிரதீப் ரங்கநாதனின் 'LIK' படமும் அதே நாளில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement