சூர்யா 42 : சூர்யாவிற்கு ஜோடியாகும் 'சீதா ராமம்' பட நாயகி மிருணால்
'சீதா ராமம்' படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் மிருணால் தாக்கூர். துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான இந்த படத்தின் பாடல்கள், மிகவும் ரசிக்கப்பட்டது. தற்போது அவரை, சூர்யாவின் 42வது படத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 'சிறுத்தை' சிவா இயக்கும் இந்த படம், ஒரு வரலாற்று கால படம் எனக்கூறப்படுகிறது. பல்வேறு காலகட்டத்தில் நடைபெறுவதாக உள்ள இந்த படத்தில், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், சூர்யாவிற்கு இணையாக மிருணால் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. சூர்யாவின் படங்களிலேயே அதிக பட்ஜெட் படம் இது எனவும், கிட்டத்தட்ட 10 இந்தியா மொழிகளில் தயாராகிறது எனவும் செய்திகள் கூறுகின்றன. இவருடன், 'தோனி' பட நாயகி திஷா பதானியும் நடிக்கிறார்.