இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடி ஆகியவற்றில் வெளியாகும் படங்களின் பட்டியல்
செய்தி முன்னோட்டம்
கோடை விடுமுறை விட்டாச்சு. அதனால் வாரந்தோறும் புதுப்புது படங்கள் வெளியான வண்ணம் உள்ளது. இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள், எதில் வெளியாக போகிறது என்பது குறித்து ஒரு முன்னோட்டம்.
பிச்சைக்காரன்-2: இந்த வார இறுதியில், மே-19, விஜய் ஆண்டனி இயக்கி, நடித்துள்ள 'பிச்சைக்காரன் 2 ' படம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. சென்ற மாதமே இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கபட்ட நேரத்தில், படம் 'கதை திருட்டு' வழக்கில் சிக்கியது. இந்த திரைப்படத்தில், காவ்யா தப்பார், ராதாரவி, ஒயி.ஜி மகேந்திரன், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்: விஜய் சேதுபதி மற்றும் மேகா ஆகாஷ் நடித்துள்ள இந்த திரைப்படத்தில் இயக்குனர்கள் மகிழ் திருமேனி, மோகன் ராஜா ஆகியோரும் நடித்துள்ளனர்.
card 2
ஓடிடி வெளியீடுகள் என்னென்ன?
திரையில் வெற்றிகரமாக ஓடியபின்னர், ஓடிடியில் மக்களை சந்திக்க வருகிறது சில திரைப்படங்கள்.
அதோடு, நேரடியாக ஓடிடியில் வெளியாகவிருக்கிறது ஒரு வெப் சீரீஸ்.
மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்: நீண்ட நாட்களாக எடுக்கப்பட்டு வந்த இந்த திரைப்படத்தில், வரலக்ஷ்மி சரத்குமார், மஹத் ராகவேந்திரா, சந்தோஷ் பிரதாப் மற்றும் ஆரவ் ஆகியோர் நடித்துள்ளனர். இது நேரடியாக ஆஹா ஒரிஜினலில் வெளியாகிறது. இதை தயாள் பத்மநாபன் இயக்கியுள்ளார்.
தெய்வ மச்சான்: விமல் நடிப்பில் இந்த மாத துவக்கத்தில் வெளியான இந்த திரைப்படம், சிம்ப்ளி சவுத் என்ற ஓடிடி தலத்தில் வெளியாகிறது.
மாடர்ன் லவ்: ஹிந்தி, தெலுங்கில் இதே தலைப்பில் வெளியான அந்தாலஜி தொடர், தமிழ் ரசிகர்களுக்கு உருவாக்கப்பட்டுள்ளது இந்த நவீன காதல் கதைகளின் தொகுப்பு இந்த சீரீஸ்.