சூர்யாவின் 'சீன்' & நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன் 2' ட்விட்டர் எக்ஸ் விமர்சனம்: தீபாவளி ரேஸில் வென்றது யார்?
செய்தி முன்னோட்டம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ் திரையுலகின் இரு பெரும் நட்சத்திரங்களான நடிகை நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன் 2' மற்றும் நடிகர் சூர்யாவின் 'சீன்' ஆகிய திரைப்படங்கள் இன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளன. தமிழக அரசு சிறப்பு அனுமதியாக அதிகாலைக் காட்சிகளுக்கு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, அதிகாலையிலேயே திரையரங்குகளில் குவிந்த ரசிகர்கள் திரைப்படங்களை கண்டு தங்களது விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
மூக்குத்தி அம்மன் 2
நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன் 2': ரசிகர்களின் முதல் பார்வை
இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தில் நயன்தாராவுடன் ரெஜினா கசாண்ட்ரா, ஊர்வசி, யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஹிப்ஹாப் தமிழா ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சுந்தர்.சி படங்களுக்கே உரித்தான பண்டிகைக் கால உற்சாகம், கலகலப்பான நகைச்சுவை மற்றும் சிறப்பான மழைக் காட்சிகள் படத்திற்குப் பலமாக அமைந்துள்ளன.
முதல் பாதியில் விறுவிறுப்பான கதைகளத்துடன், சரியான நேரத்தில் அமைந்த இடைவேளைக் காட்சியும், தாக்கத்தை ஏற்படுத்தும் அம்மன் காட்சிகளும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.
சீன்
சூர்யாவின் 'சீன்': ரசிகர்களின் முதல் பார்வை
'ஆவேஷம்' புகழ் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில், நடிகர் சூர்யா கதநாயகனாக நடித்துள்ள 'சீன்' திரைப்படத்தில் நஸ்ரியா, நஸ்லென், லால் மற்றும் ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சூர்யாவை இதுவரை திரையில் பார்த்திராத முற்றிலும் மாறுபட்ட, புதிய பரிமாணத்தில் இயக்குநர் ஜித்து மாதவன் காட்டியுள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
விறுவிறுப்பான முதல் பாதியைத் தொடர்ந்து, அதிரடி மற்றும் மாஸ் காட்சிகளால் இரண்டாம் பாதி நிறைந்துள்ளதாகவும், குறிப்பாகக் கிளைமாக்ஸில் சூர்யா மற்றும் நஸ்லென் இடையிலான மோதல் காட்சி திரையரங்குகளில் மெய்சிலிர்க்க வைக்கும் தருணமாக அமைந்துள்ளது என்றும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.