
வேட்டையன் ஆடியோ லாஞ்சின் மறக்கமுடியாத தருணம்; சன் நெக்ஸ்டில் வெளியான புதிய வீடியோ
செய்தி முன்னோட்டம்
அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ள வேட்டையன் படத்திற்கான புரமோஷன்களில் படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் ஈடுபட்டுள்ளது.
அந்த வகையில், கடந்த செப்டம்பர் 20 அன்று நடந்த வேட்டையன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடந்தவற்றை சிறுசிறு வீடியோக்களாக சன் நெக்ஸ்ட் தளத்தில் வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், ஆடியோ வெளியீட்டு விழாவின் சிறந்த தருணம் எனக் குறிப்பிட்டு ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளது.
அதில் இசையமைப்பாளர் அனிருத், நடிகர் ரஜினிகாந்தை மேடைக்கு அழைத்துச் சென்று நடனமாடும காட்சி உள்ளது.
டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் தயாரான இந்த படத்தில் ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டக்குபதி, ரித்திகா சிங் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
மறக்க முடியாத தருணம்
A moment to remember at #VettaiyanAudioLaunch 🥹🫶🏾
— SUN NXT (@sunnxt) October 7, 2024
Watch Vettaiyan Audio Launch - full show on #SunNXT
▶️ https://t.co/PS6AKho5rH#SuperstarRajnikanth #TJGnanavel #Anirudh #Vettaiyan #VettaiyanAudioLaunchOnSunNXT pic.twitter.com/yFAE9tThsJ