Page Loader
நீண்ட இடைவேளைக்கு பிறகு, மீண்டும் நடிக்க வருகிறார் மேக்னா ராஜ்
கணவர் சிரஞ்சீவி சார்ஜா இறப்பிற்கு பிறகு நடிக்காமல் இருந்த மேக்னா ராஜ், இப்போது மீண்டும் நடிக்கவருகிறார்

நீண்ட இடைவேளைக்கு பிறகு, மீண்டும் நடிக்க வருகிறார் மேக்னா ராஜ்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 21, 2023
12:48 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு, 'காதல் சொல்ல வந்தேன்', 'உயர்திரு 420', 'நந்தா நந்திதா' போன்ற படங்களின் மூலம் பரிச்சயமானவர் மேக்னா ராஜ். மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்த மேக்னா, கணவரின் இறப்பிற்கு பிறகு நடிக்கவில்லை. தற்போது, அவர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க இருக்கிறார். 'தத்சமா தத்பவா' (Tatsama Tadbhava) என்ற கன்னட படம் மூலம் ரீ-என்ட்ரி தரவுள்ளார் மேக்னா. மேக்னாவின் கணவர், சிரஞ்சீவி சார்ஜா, ஆக்க்ஷன் கிங் அர்ஜுனின் மருமகனாவார். இவர் கடந்த 2020-ம் ஆண்டு மாரடைப்பால் காலமானார். அப்போது மேக்னா 5 மாத கர்ப்பிணி என்பது கூடுதல் சோகம். மேக்னாவின் பெற்றோர்கள் இருவரும், கன்னட திரையுலகில் பிரபல நடிகர்கள். கூடுதலாக பல படங்களையும் தயாரித்துள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

மீண்டும் நடிக்க வருகிறார் மேக்னா ராஜ்