வெளியானது 'மார்கழி திங்கள்' படத்தின் டீசர்
இயக்குனர் சுசீந்திரனின் தயாரிப்பு நிறுவனம் 'வெண்ணிலா புரொடக்க்ஷன்ஸ்' தயாரிப்பில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் இயக்குனராக களமிறங்கியுள்ள முதல் படம் தான் 'மார்கழி திங்கள்'. புதுமுகங்கள் கொண்டு எடுக்கப்படும் இப்படத்தில் இயக்குநர் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். 31 ஆண்டுகளுக்கு பின்னர் இளையராஜா, பாரதிராஜா இருவரும் இணைந்துள்ள இப்படத்தில் இளையராஜா இசையில் அமைந்துள்ள பாடல்கள் நிச்சயம் ரசிகர்கள் மனதை கவரும் என்று முன்னதாக படக்குழு கூறியிருந்தனர். மேலும் தனது முதல் படத்திலேயே தனது தந்தையை வைத்து இயக்கும் வாய்ப்பு மிக மகிழ்ச்சி தருகிறது என்று மனோஜ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் டீசர் சற்றுமுன்னர் இணையத்தில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.