Page Loader
33 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைகிறதா 'தளபதி' ஜோடி? : இதோ நமக்குத் தெரிந்தவை
33 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைகிறதா 'தளபதி' ஜோடி?

33 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைகிறதா 'தளபதி' ஜோடி? : இதோ நமக்குத் தெரிந்தவை

எழுதியவர் Venkatalakshmi V
Oct 06, 2024
07:39 am

செய்தி முன்னோட்டம்

33 ஆண்களுக்கு முன்னர் மணிரத்னம் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கிளாசிக் திரைப்படம் தான் 'தளபதி'. இன்றளவும் இப்படத்திற்கும், படத்தின் பாடல்களுக்கும் ரசிகர்கள் உண்டு. நடிகர் அரவிந்த்சாமி வெள்ளித்திரையில் அறிமுகம் ஆன படமும் இதுவே. இதில் ரஜினி தவிர மம்மூட்டி, ஷோபனா, நாகேஷ், கீதா, பானுப்ரியா, ஸ்ரீவித்யா மற்றும் ஜெய்ஷங்கர் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த நிலையில் தற்போது இணையத்தில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி, மணிரத்னம் மீண்டும் ரஜினியை இயக்க தயாராகி விட்டாராம். இதற்கான அறிவிப்பு ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12 அன்று வெளியாகும் என கூறப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

பட வேலைகள் 

ரஜினிகாந்த் மற்றும் மணிரத்னத்தின் தற்போதைய பட நிலவரங்கள்

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீசிற்கு தயாராக உள்ளது 'வேட்டையன்' திரைப்படம். இப்படத்தில், ரஜினிகாந்த், ஃபஹத் ஃபாசில், ராணா டக்குபதி, அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், கிஷோர், ரோகினி உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக அவர், லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட ரஜினி, தற்போது ஓய்வில் இருக்கிறார். அதன் பிறகு அவர் மீண்டும் பட வேலையைத் தொடங்குவார். மறுபுறம், இயக்குனர் மணிரத்னம், கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசன் ஆகியோருடன் தக் லைஃப் என்ற படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளில் பிஸியாக உள்ளார்.