Page Loader
மணிகண்டன் படத்தின் முதல் பாடல் அறிவிப்பு வெளியானது

மணிகண்டன் படத்தின் முதல் பாடல் அறிவிப்பு வெளியானது

எழுதியவர் Sindhuja SM
Dec 26, 2023
04:16 pm

செய்தி முன்னோட்டம்

குட்நைட் திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர், நடிகர் மணிகண்டன் நடிக்கும் அடுத்த படமான 'லவ்வர்' திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. காதல் டிராமாவாக உருவாகி உள்ள இப்படத்தை, லிவ்வின் திரைப்படத்தை இயக்கிய, பிரபுராம் வியாஸ் இயக்கியுள்ளார். படத்தில் ஹீரோயினாக ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கிறார். படத்தின் இசை வேலைகளை சீன் ரோல்டன் கவனிக்கிறார். குட்நைட் திரைப்படத்தை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் அதே பேனரில் இப்படத்தையும் தயாரிக்கின்றன. முன்னதாக, கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்த நிலையில், சில நாட்களுக்கு முன் டீசர் வெளியிடப்பட்டது. இந்நிலையில், அப்படத்தின் முதல் பாடலான 'வெலகாத' பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது  'வெலகாத' பாடல்