Loading...
மணிரத்னம் - விஜய் சேதுபதி - சாய் பல்லவி புதிய படம்: கொல்கத்தாவில் படப்பிடிப்பு தொடக்கம்
படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக, சிறப்புப் பயிற்சிப் பட்டறையில் படக்குழுவினர் பங்கேற்றனர்

மணிரத்னம் - விஜய் சேதுபதி - சாய் பல்லவி புதிய படம்: கொல்கத்தாவில் படப்பிடிப்பு தொடக்கம்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 24, 2026
02:15 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குநரான மணிரத்னம் இயக்கத்தில், விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி முதன்முறையாக இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்கியுள்ளது. முன்னதாகவே திட்டமிடப்பட்ட இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் தாமதமான நிலையில், தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது என சினிமா எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. படப்பிடிப்பிற்காக நடிகர் விஜய் சேதுபதி கிளீன்-ஷேவ் தோற்றத்தில் கொல்கத்தா விரைந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. கொல்கத்தாவில் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக, சென்னையில் நடைபெற்ற சிறப்புப் பயிற்சிப் பட்டறையில் படக்குழுவினர் பங்கேற்றனர். தற்போது கொல்கத்தாவில் முதற்கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விவரங்கள்

பிரம்மாண்ட தயாரிப்பும், இசையும்

இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படம் தற்காலிகமாக 'புரொடக்ஷன் நம்பர் 23' என்று அழைக்கப்படுகிறது.

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் இந்தியா டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இத்திரைப்படத்தைத் தயாரிக்கின்றன.

மணிரத்னத்தின் வழக்கமான கூட்டாளியான இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

'செக்கச்சிவந்த வானம்' திரைப்படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி இரண்டாவது முறையாக மணி ரத்னம் இயக்கத்தில் நடிக்கிறார்.

அதேவேளையில், நடிகை சாய் பல்லவி, இயக்குநர் மணிரத்னம் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவருடனும் முதன்முறையாக கைகோர்க்கிறார்.

இப்படத்தின் கதைக்களம் மற்றும் இதர நடிகர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT