Loading...
மணிரத்னம் இயக்கத்தில் முதன்முறையாக இணையும் சூர்யா & தனுஷ்?
இரு கதாநாயகர்கள் திரைப்படத்தை இயக்க இயக்குநர் மணிரத்னம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

மணிரத்னம் இயக்கத்தில் முதன்முறையாக இணையும் சூர்யா & தனுஷ்?

எழுதியவர் Venkatalakshmi V
Nov 02, 2026
12:00 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான சூர்யா மற்றும் தனுஷ் ஆகிய இருவரையும் இணைத்து, பிரம்மாண்டமான இரு கதாநாயகர்கள் திரைப்படத்தை இயக்க இயக்குநர் மணிரத்னம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்திட்டம் தொடர்பாக இரண்டு நடிகர்களுடனும் முதற்கட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகவும், அவர்கள் இருவரும் கதைக்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் திரைப்பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடிகர்களின் சம்மதத்தைத் தொடர்ந்து, படத்திற்கான அவர்களின் ஊதியம், படப்பிடிப்புத் தேதிகள் மற்றும் கால்ஷீட் ஒதுக்கீடு ஆகியவை குறித்து அடுத்தகட்ட தீவிர ஆலோசனைகள் நடைபெறவுள்ளன.

வர்த்தக மதிப்பு

கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பு

இத்திரைப்படம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டால், இது சூர்யாவின் 48-வது திரைப்படத்திற்குப் பிறகு உருவாகும் 'சூர்யா 49' ஆக அமையக்கூடும். (முன்னதாக மணிரத்னத்தின் தயாரிப்பில் 'நேருக்கு நேர்' மற்றும் அவரது இயக்கத்தில் 'ஆயுத எழுத்து' ஆகிய படங்களில் சூர்யா நடித்துள்ளார்).

தனுஷைப் பொறுத்தவரை, அவரது 56-வது திரைப்படத்தின் பணிகளை நிறைவு செய்த பிறகு இத்திரைப்படம் 'D57' ஆக உருவாக வாய்ப்புள்ளது.

முன்னதாக மணிரத்னம் இயக்கத்தில் தனுஷ் நடிப்பதாக சில திட்டங்கள் பேசப்பட்ட போதிலும், அவை கைக்கூடாமல் போனது குறிப்பிடத்தக்கது.

பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூல் சாதனைகளை நிகழ்த்தக்கூடிய சூர்யா மற்றும் தனுஷ் ஆகிய இரு முன்னணி நட்சத்திரங்கள், தமிழ் சினிமாவின் மாபெரும் இயக்கனான மணிரத்னத்தின் கீழ் முதன்முறையாக ஒன்றிணைவது கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT