மோகன்லால் நடிக்கும் மலைக்கோட்டை வாலிபன் திரைப்படத்தின் டீசர் வெளியானது
செய்தி முன்னோட்டம்
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் உருவாகும், மலைக்கோட்டை வாலிபன் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கியுள்ள இப்படத்திற்கு, பிஎஸ் ரபீக் கதை வசனம் எழுதியுள்ளார். ஓன் & மேரி கிரியேட்டிவ், செஞ்சுரி ஃபிலிம்ஸ் மற்றும் மேக்ஸ்லாப் & சரேகம, ஆகிய நிறுவனங்கள் படத்தை தயாரித்துள்ளனர்.
இன்றைய காலகட்டத்தில் படம் குறித்த தகவல்கள் வெளியில் கசியாமல் இருக்க, படக்குழுவினர் பெரு முயற்சி எடுத்து வரும் நிலையில், லிஜோ ஜோஸ் அதை கச்சிதமாக செய்துள்ளார்.
படத்தின் டீசரிலிருந்து, படம் குறித்த எந்த கதையையும் நம்மால் யூகிக்க முடியவில்லை.
டீசரை டீகோட் செய்ய வேண்டும் என்றால், மலைக்கோட்டை வாலிபனில் மோகன்லால் மந்திரவாதியாகவோ அல்லது மாயையாகவோ நடிக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.
embed
மலைக்கோட்டை வாலிபன் டீசரில் மோகன்லால்
#MalaikottaiVaaliban Teaser - #Mohanlal ..🔥 pic.twitter.com/o6o3iH6i5A— Laxmi Kanth (@iammoviebuff007) December 6, 2023