Page Loader
'பிரெண்ட்ஸ்' பட இயக்குநர் சித்திக் உடல்நிலை கவலைக்கிடம்; ECMO பொறுத்தியுள்ளதாக தகவல்
'ப்ரெண்ட்ஸ்' படப்பிடிப்பு தளத்தில் நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யாவிற்கு காட்சிகளை விளக்கும் இயக்குனர் சித்திக்

'பிரெண்ட்ஸ்' பட இயக்குநர் சித்திக் உடல்நிலை கவலைக்கிடம்; ECMO பொறுத்தியுள்ளதாக தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 08, 2023
12:28 pm

செய்தி முன்னோட்டம்

மலையாள சினிமா உலகத்தில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் சித்திக். மலையாளத்தில் பல வெற்றி படங்களை தந்தவர், தமிழில் விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களே தந்திருந்தாலும், அனைத்தும் வெற்றி படங்களே. விஜய்-சூர்யா-வடிவேலு நடிப்பில் வெளியான ப்ரெண்ட்ஸ் திரைப்படத்தை இயக்கி இருந்தது சித்திக் தான். 'காண்ட்ராக்டர் நேசமணி' என்ற மறக்க முடியாத கதாபாத்திரைத்தை வடிவமைத்தவர் இவரே. தொடர்ந்து, 'சாது மிரண்டா', 'காவலன்', அரவிந்த்சாமியின் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' ஆகிய படங்களை இயக்கினார். இயக்குனர் சித்திக்கிற்கு, ஏற்கனவே சுவாச பிரச்னைகள் இருந்ததாகவும், அது தீவிரமடைந்து, அவரின் கல்லீரலை பாதித்ததாகவும் கூறப்படுகிறது. இதற்காக கடந்த ஜூலை 10-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சித்திக்கிற்கு தற்போது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்காக எக்மோ கருவி பொறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

இயக்குநர் சித்திக் உடல்நிலை கவலைக்கிடம்