
நடிகர் மோகன்லால் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி
செய்தி முன்னோட்டம்
மூத்த மலையாள நடிகர் மோகன்லால் கடுமையான காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம், தசை வலி உள்ளிட்ட அறிகுறிகளை அடுத்து கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, மோகன்லாலுக்கு வைரஸ் சுவாச தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
இதையடுத்து மோகன்லால் அடுத்த ஐந்து நாட்களுக்கு பொது தொடர்புகளைத் தவிர்க்கவும் பரிந்துரைக்கப்பட்ட மருந்து முறையைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
எல் 2: எம்புரான் படப்பிடிப்பையும், பரோஸ் படத்தின் போஸ்ட் புரொடக்ஷனையும் முடித்த பிறகு, மோகன்லால் குஜராத்தில் இருந்து கொச்சிக்குத் திரும்பினார்.
அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்ததாகக் கூறப்படுகிறது. எனினும், மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்படும் நிலையில் தற்போது அவரது உடல்நிலை தெரிவருவதாகக் கூறப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
மருத்துவ அறிக்கை
Wishing @Mohanlal a speedy recovery! ❤️🩹 pic.twitter.com/PjQ31OXcQa
— Sreedhar Pillai (@sri50) August 18, 2024