Page Loader
தங்கலான் திரைப்படத்தில் மாளவிகாவின் கதாபாத்திர போஸ்டர் வெளியீடு 
ஹாப்பி பர்த்டே மாளவிகா!

தங்கலான் திரைப்படத்தில் மாளவிகாவின் கதாபாத்திர போஸ்டர் வெளியீடு 

எழுதியவர் Venkatalakshmi V
Aug 04, 2023
03:47 pm

செய்தி முன்னோட்டம்

மலையாள படவுலகிலிருந்து, தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மாளவிகா மோஹனன். 'மாஸ்டர்' படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமானவர். இவர் தமிழ் மட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். முன்னணி கதாநாயகியாக கருதப்படும் மாளவிகா. தற்போது விக்ரம் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கிவரும் 'தங்கலான்' திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார். இது, கோலார் தங்கவயலை அடிப்படையாக கொண்ட பீரியட் திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்நிலையில், மாளவிகா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரின் பிறந்தநாள் பரிசாக, தங்கலான் படக்குழுவினர் ஒரு போஸ்ட்டரை வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் வெளியிட்டுள்ள அந்த போஸ்டரில், ஒரு இளவரசி போல, தங்க நகைகளையும், தலையில் கிரீடமும் சூடியுள்ளார் மாளவிகா.

ட்விட்டர் அஞ்சல்

ஹாப்பி பர்த்டே மாளவிகா