LOADING...
யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டரை தயாரிப்பு குழு வெளியிட்டுள்ளது
'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர்

யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டரை தயாரிப்பு குழு வெளியிட்டுள்ளது

எழுதியவர் Venkatalakshmi V
Nov 06, 2025
05:02 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் நடிப்பில் கடைசி திரைப்படம் எனக்கூறப்படும் 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. புதிய போஸ்டரில், தளபதி விஜய் நீல நிற சட்டையில், கருப்புக் கூலிங் கிளாஸ் மற்றும் முறுக்கு மீசையுடன் காட்சியளிக்கிறார். ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருக்கும் கூட்டத்தின் நடுவே, விஜய் தனி ஒருவனாக நெஞ்சை நிமிர்த்தி நிற்கிறார். மக்களின் கைகள் விஜய்யின் நெஞ்சின் மீது வைக்கப்பட்டிருப்பது போன்ற காட்சி, அவர் மக்கள் தலைவர் (ஜனநாயகன்) என்ற கருத்தை வலியுறுத்துகிறது. H.வினோத் இயக்கியுள்ள இந்த திரைப்படம் 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.