
உளவியல் பரிசோதனை வழக்கு: லோகேஷ் கனகராஜிற்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம்
செய்தி முன்னோட்டம்
இயக்குனர் லோகேஷ் கனகராஜிற்கு உளவியல் பரிசோதனை செய்யவேண்டும் என்று தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றதின் மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.
மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த ராஜாமுருகன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் பொது நலமனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில்,"விஜய் கதாநாயகனாக நடித்த 'லியோ' என்ற திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். இந்த படத்தில், சட்ட விரோத செயல்கள் போன்ற காட்சிகள் மூலம் வன்முறையை தூண்டும் விதமாக காட்சிகள் எடுக்கிறார். இதனை தணிக்கை குழுவினர் முறையாக ஆய்வு செய்ய வேண்டும்.மேலும் லோகேஷ் கனகராஜுக்கு முறையான உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும். இதுபோன்ற வன்முறையை தூண்டும் காட்சிகளை எடுப்பதற்காக அவர் மீது வழக்கு தொடர வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
card 2
அமர்வு நீதிமன்றம் விசாரணை
இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மனுதாரர் தரப்பில் நேற்று ஆஜர் ஆகாததால், இன்று விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
இன்று வழக்கினை விசாரித்த நீதிபதிகள், லியோ படத்தில் எத்தனை வன்முறை காட்சிகள் உள்ளன, அவை எந்தெந்த இடங்களில் உள்ளன என்பவை குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தரப்பு விரிவான அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.
தொடர்ந்து இந்த வழக்கை ஒத்திவைப்பதாக உத்தரவிட்டனர்.
ஏற்கனவே பலரும் லோகேஷ் கனகராஜ் திரைப்படங்களில் வன்முறை அதிகமாக இருப்பதாக கருதி வரும் நிலையில், இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.