சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது பெறுகிறது மாதவனின் ராக்கெட்ட்ரி; சிறந்த நடிகராக அல்லு அர்ஜுன் தேர்வு
செய்தி முன்னோட்டம்
இந்திய சினிமாவில் மிக மதிப்பிற்குரிய விருதுகளுள் ஒன்று தான் 'தேசிய விருது'. கடந்த 69 ஆண்டுகளாக இந்த விருது தொடர்ந்து வழங்கப்பட்டு கலைஞர்களை சிறப்பித்து வருகிறது.
அதன்படி, சென்ற ஆண்டு வெளியான சிறந்த திரைப்படங்களுக்கான விருதை மத்திய அரசு இன்று அறிவித்தது.
இந்தாண்டு, 28 மொழிகளில் இருந்து மொத்தம் 280 திரைப்படங்கள் விருதுகளுக்கு போட்டியிட்டுள்ளது.
அதேபோல, 23 மொழிகளில் 158 அம்சம் சாராத திரைப்படங்களும் பரிசீலனைக்கு வந்ததாக I&B கூடுதல் செயலாளர் நீரஜா சேகர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
தொடர்ந்து சிறந்த மாநில திரைப்படத்திற்கான சிறப்பு குறிப்பை, 'கடைசி விவசாயி' திரைப்படமும், அதில் நடித்த மறைந்த நடிகர் நல்லாண்டியும் பெற்றனர்.
அதனை தொடர்ந்து, திரைப்படங்கள் சார்ந்த விருதுகள் அறிவிக்கப்பட்டது
card 2
சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை
சிறந்த திரைப்படத்திற்கான விருதை, நடிகர் மாதவன் இயக்கி நடித்த, 'ராக்கெட்ட்ரி' திரைப்படம் தட்டிச்சென்றது.
அதோடு, சிறந்த நடிகருக்கான விருதை, 'புஷ்பா' படத்தில் நடித்ததற்காக அல்லு அர்ஜுன் வென்றார். சிறந்த நடிகைக்கான விருதை, 'கங்குபாய்' படத்தில் நடித்ததற்காக அலியா பட்டும்,'மிமி' படத்தில் நடித்ததற்காக 'க்ரிதி சானொன்'-உம் வென்றனர்.
சிறந்த இசையமைப்பாளர் விருதை புஷ்பா படத்திற்கு இசையமைத்ததற்காக தேவி ஸ்ரீ பிரசாத் பெறுகிறார்.
மேலும், சிறந்த பாடகிக்கான, இரவின் நிழல் படத்தில் பாடிய ஸ்ரேயா கோஷல் பெறுகிறார்.
மேலும், சிறந்த சண்டை அமைப்பாளர், சிறந்த நடனம் மற்றும் சிறந்த ஸ்பெஷல் ஏஃபக்ட்ஸ் விருதுகளை RRR திரைப்படம் வென்றது,
தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம், தேச ஒற்றுமைக்கான 'நர்கிஸ் தத் சிறந்த திரைப்படம்' விருதை பெறுகிறது