LOADING...
தெலுங்கில் அறிமுகமாகும் லோகேஷ் கனகராஜ்; இவர்கள் தான் ஹீரோக்கள்!
லோகேஷ் கனகராஜ், தெலுங்கில் ஒரு மாபெரும் அறிமுகத்தை தரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன

தெலுங்கில் அறிமுகமாகும் லோகேஷ் கனகராஜ்; இவர்கள் தான் ஹீரோக்கள்!

எழுதியவர் Venkatalakshmi V
Oct 30, 2025
01:41 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனது இயக்கத்தில் அடுத்து உருவாகவுள்ள 'கைதி 2' திரைப்படத்திற்குப் பிறகு, தமிழ் திரையுலகை தாண்டி தெலுங்கில் ஒரு மாபெரும் அறிமுகத்தை தரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள இந்தத் திரைப்படத்தினை தயாரிக்க போவது 'ஜனநாயகன்' படத்தை தயாரித்து வரும் KVN productions நிறுவனம் எனவும் கூறப்படுகிறது. இது குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

விவரங்கள்

லோகேஷின் தெலுங்கு அறிமுக படம் பற்றிய விவரங்கள்

இப்படத்தில் தெலுங்கு திரையுலகின் இரு முன்னணி நட்சத்திரங்களான பவன் கல்யாண் மற்றும் பிரபாஸ் ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளனர். இருவரும் முதன்மை வேடங்களில் நடிக்க உள்ளனர் எனவும் Movie Tamil தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ளது. லோகேஷின் இந்த தெலுங்கு அறிமுக படத்தின் கதை கரு முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோரிடம் கூறியதாகவும், அந்த திட்டம் நிறைவேறாததால் அதை அப்படியே தெலுங்கிற்கு எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த புதிய படத்தை குறித்த அறிவிப்பு கைதி 2 படத்தின் வெளியீட்டிற்கு பின்னர் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதன் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ஆவார்.