கடந்த இரண்டு ஆண்டுகளில் திடீரென காலமான தமிழ் திரையுலகின் பிரபலங்கள்
தமிழ் திரையுலகிற்கு கடந்த ஆண்டு துயரம் மிகுந்த ஆண்டாகவே இருந்தது எனக்கூறலாம். பல திரையுலக ஜாம்பவான்கள், யாருமே எதிர்பார்க்காத நேரத்தில், மரணித்தது பலரால் இன்று வரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த ஆண்டும் தொடர்ந்து 3 எதிர்பாராத மரணங்கள் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அப்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில், இந்த பூவுலகை விட்டு மறைந்தாலும், மக்கள் மனதில், தங்கள் கலைத்திறமையால், நீங்கா இடம் பிடித்துள்ள சில நட்சத்திரங்கள் இதோ: விவேக்: இன்றும் யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியாத மரணம், பத்மஸ்ரீ விவேக்கின் மரணம் தான். முதல் நாள், அரசாங்கத்தின் சார்பாக மக்களிடத்தில் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தவர், அடுத்த நாள் காலை 'காலமானார்' என்ற செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி, மாரடைப்பால் காலமானார். விவேக்.
பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய வாணி ஜெயராமின் மரணம்
பிரதாப் போத்தன்: இவரும் சென்ற ஆண்டு ஜூலை 15ஆம் தேதி திடீர் உடல்நலக்குறைவால் காலமானார். இவரின் மரணமும் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் நிகழ்ந்தது. நடிகர், இயக்குனர் என பன்முக திறைமைகொண்டவர் பிரதாப் போத்தன். TP கஜேந்திரன்: இயக்குனரும் நடிகருமான TP கஜேந்திரன், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி காலமானார். இவர் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பாடகி வாணி ஜெயராம்: இவரின் மரணம் பலருக்கும் அதிர்ச்சி தான். காரணம், இவருக்கு பத்ம விருது அறிவிக்கப்பட்டு, அதை ஜனாதிபதி கையால் பெரும் முன்னரே, இவர் மரணமடைந்தார். வீட்டில் மயக்கத்திலேயே இவரது மரணம் சம்பவித்தது, பெருந்துயரம். மனோபாலா: இவரின் மரணமும் தமிழ் சினிமாவில் ஈடு செய்ய முடியாத ஒன்றாகும்.