ஆதார் இருந்தால் தான் உள்ளே அனுமதி: லியோ வெற்றிவிழாவிற்கு விதிக்கப்பட்ட கெடுபிடிகள்
செய்தி முன்னோட்டம்
'லியோ' படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டத்திற்கு தமிழக காவல்துறை அனுமதி அளித்ததை தொடர்ந்து, விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
படத்தின் இசைவெளியீட்டு விழா ரத்தை ஈடு செய்யவே, விஜய் ரசிகர்களுக்காக, இந்த வெற்றிவிழா ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
எனினும், விழாவிற்கு ஏகப்பட்ட கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.
விழா, நாளை மாலை 6 மணிக்கு துவங்கும் எனவும், ரசிகர்கள் 4 மணி முதல் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூறப்படுகிறது.
விழாவிற்கான பாஸ் வைத்திருக்கும் ரசிகர்கள், அவர்களின் ஆதார் அட்டையை காண்பித்தால் மட்டுமே அனுமதிக்கபடுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
விழா நேரத்தில், போக்குவரத்து நெரிசலோ, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஏதேனும் சம்பவம் நடந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.
embed
லியோ வெற்றிவிழாவிற்கு விதிக்கப்பட்ட கெடுபிடிகள்
#LEO : SUCCESS MEET⭐
6000 Fans Are Being Allowed For The #LeoSuccessMeet 🔥
Fans Are Requested Bring Thier Aadhaar Card With The Fan Tags🤝🏾
Only 200 - 300 Cars Are Allowed at The Parking Of Nehru Stadium🙂#ThalapathyVijay | #LokeshKanagaraj pic.twitter.com/FZTlWhvDML— Official CinemaUpdates (@OCinemaupdates) October 31, 2023