Page Loader
புரட்சி தலைவர் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள்; கட்சி தொண்டர்கள், அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்
புரட்சி தலைவர் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள் இன்று!

புரட்சி தலைவர் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள்; கட்சி தொண்டர்கள், அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 17, 2023
03:12 pm

செய்தி முன்னோட்டம்

இன்று முன்னாள் முதல்வர், புரட்சி தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரனின் 106 வது பிறந்தநாள். அவரின் பிறந்தநாளில், அவரைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவலைக் காண்போம். பாய்ஸ் ட்ராமா கம்பெனி மூலம் தனது நடிப்பார்வத்திற்கு வித்திட்ட எம்ஜிஆர், சதி லீலாவதி என்ற படத்தின் மூலம், 1936 -இல் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து நாடோடி மன்னன், அலிபாபாவும் நாற்பது திருடர்களும் போன்ற பல வெற்றி படங்களில் நடித்து மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றார். பின்னர், திரைப்படங்களின் மூலமாக புரட்சிகர கருத்துகளை பதிவு செய்ய ஆரம்பித்தார். அடிமை பெண், ரிக்க்ஷாக்காரன் போன்ற படங்கள் அவரின் கருத்துகளை பாமரர்களிடம் எடுத்து செல்ல உதவின. பின்னர், அறிஞர் அண்ணாவின் வலியுறுத்தலின் பேரில், தனது அரசியல் பயணத்தையும் துவங்கினார்.

அரசியல்

எம்ஜிஆரின் அரசியல் பயணம்

அரசியல் மாற்றங்களினால், தேர்தலில் நின்று, 1977 -இல் தமிழக முதல்வராக அரியணை ஏறினார். உலகிலேயே, சினிமா நாயகனாய் இருந்து, முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபர், எம்ஜிஆர் தான். அவர் மரணிக்கும் தருவாயிலும், முதல்வராகவே இருந்தார். 1960 -இல், அவருக்கு வழங்கப்பட்ட 'பத்மஸ்ரீ' பட்டத்தை, 'தமிழ் மொழியில் அல்லாமல், ஹிந்தியில் வழங்கப்பட்ட" காரணத்தினால் புறக்கணித்தார், என்று செய்திகள் தெரிவிக்கின்றன. அவரின் பிறந்தநாளான இன்று, நாடு முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள், அவரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து வணங்குவர். மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆரின் சமாதிக்கு, கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் மரியாதை செலுத்துவர். அதிமுக தலைவர்களான, ஓபிஸ் மற்றும் EPS, மற்றும் சசிகலா ஆகியோர், தனி தனியே, எம்ஜிஆரின் பிறந்தநாளை, தொண்டர்களுடன் கொண்டாடி வருகின்றனர்.